Web
Analytics
சாய்ந்தமருது உப மின் பாவனையாளர் சேவை நிலையம் பாவனையாளர் சேவை நிலையமாக தரம் உயர்கின்றது. - Sri Lanka Muslim Congress

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் இலங்கை மின்சார சபையின் சாய்ந்தமருதுகான உப மின் பவனையாளர் சேவை நிலையம் நிரந்தர மின் பாவனையாளர் நிலையமாக ( ES Depot) மிக விரைவில் தரம் உயர்த்தப்படவுள்ளது.

இதன்படி காரைதீவு,மாளிகைக்காடு சாய்ந்தமருது,கல்முனைக்குடி போன்ற பிரதேச மின் பாவனையாளர்களின் நன்மை கருதி இவ் உப மின் பாவனையாளர் நிலையம் தரம் உயர்த்துகின்றது. இப் பாவனையாளர் சேவை நிலையம் இவ் நான்கு பிரதேசங்களுக்கும் மத்தியஸ்தமாக அமைகின்ற சாய்ந்தமருது பிரதேசத்தில் அமையப்பெரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை காலமும் மக்கள் தங்களது புதிய மின்சார இணைப்பு மற்றும் மின்சார திருத்த வேலைகளுக்காக மணைச்சேனை பிரதேசத்திற்கு சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்தனர்.ஆனால் இப் புதிய பாவனையாளர் நிலையத்தின் ஊடாக அச் சிரமம் நீக்கப்பட்டு மக்களுடைய காலடியில் சேவை வழங்கப்படவுள்ளது.

தரம் உயர்த்தப்பட இருக்கும் சாய்ந்தமருதுக்கான மின் பவனையாளர் சேவை நிலையத்திற்கு ( ES Depot ) நிரந்தரமான புதிய கட்டிடம் ஒன்றையும் கட்டுவதற்கான ஏற்பாடுகளையும், நடவடிக்கைகளையும் துரிதமாக்குமாறும் அதற்குரிய காணியினை பிரதேச செயலாளரிடம் பெற்றுக்கொள்ளுமாறும் பிரதேச மின் பொறியியலாளருக்கு மின்சக்தி மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை வழங்கியுள்ளார்.

இவ் சேவை நிலையத்தை தரம் உயர்த்துவதற்கு முயற்சி செய்த விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களுக்கு இப் பிரதேச மக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவுக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM