Web
Analytics
சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச குளக்கரைக்கு கேபியன் சுவர் அமைக்கும் வேலைத்திட்டம் - Sri Lanka Muslim Congress

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதி தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச குளக்கரைக்கு கேபியன் சுவர் அமைக்கும் வேலைத்திட்டம் தற்போது நடைபெற்றுவருகின்றது.

வெள்ளத்தின் பாதிப்பை குறைக்கும்வகையில் குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது வொலிவேரியன் தெற்கு புற பாலத்தை அண்மித்த குளக்கரை பிரதேசத்திலிருந்து 80 மீட்டர் தூரத்திற்கு குறித்த கேபியன் சுவர் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் அப்பிரதேச சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் வொலிவேரியன் நுழைவாயில் பிரதேசத்தின் முகத்தோற்றம் எழில்பெறுகிறது.

குறித்த குளக்கரை பிரதேசமானது மாசுற்று காணப்படுவதை அவதானித்த பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கொண்ட பரிந்துரைக்கு அமைவாக மேற்படி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

(அகமட் எஸ். முகைடீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM