சிறந்த வழிகாட்டுதல்களினூடாக சமூகத்திற்கு பயன்தரக்கூடிய எதிர்கால இளைஞர் சக்தி ஒன்றினைக் கட்டியெழுப்புவதற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற முன்வர வேண்டும்

என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி அல் இக்ரா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் 2017.10.20ஆந்திகதி – வெள்ளிக்கிழமை பாலர் பாடசாலையின் தலைவர் அன்சார் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
 
இன்று எமது சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் மத்தியில் பல்வேறு வகையான பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்களுக்கு தேவையான முறையான வழிகாட்டுதல்கள் உரிய விதத்தில் வழங்கப்படாமையே இத்தகைய அதிகளவான பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாகவும் அமைந்துள்ளது.
 
தங்களது பிள்ளைகள் எதிர்கால சமூகத்தில் உயர் பதவிகளையும், சிறந்த தொழில்களையும் வகிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்ற பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு வெறுமெனே கல்வியினை மாத்திரம் பெற்றுக்கொடுப்பதற்கு மாற்றமாக மார்க்க விழுமியங்களுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதலினை வழங்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.
 
அவ்வாறான சிறந்த வழிகாட்டுதல் ஒன்றினூடாகவே எமது சிறார்களை சிறந்த எதிர்கால பிரஜைகளாக உருவாக்க முடியும்.
 
எனவே ஒழுக்கம் நிறைந்த, சமூகத்திற்குப் பயனளிக்கக்கூடிய எதிர்கால இளைஞர் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களும் மிகவும் அர்ப்பணிப்புடனும் சமூகம் சார்ந்த சிந்தனையுடனும் செயலாற்ற வேண்டும் என தனது உரையில் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More