சீனாவின் ‘சினோமாச் ஹெவி இக்வில் மண்ட்’ குழுமத்தினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (14) சந்தித்து கலந்துரையாடினார்கள்.

 

வர்த்தக மற்றும் உல்லாசப் பயணகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகவும், அபிவிருத்தியடைந்து வரும் ஹம்பாந்தோட்டை நகரில் குடி நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவம் தொடர்பான எதிர்காலத் தேவைகளைக் கருத்திற் கொண்டு 120 மில்லியன் ரூபா செலவில் செயற் திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பில் இவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

இத்திட்டம் தொடர்பாக இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு தாம் எண்ணியுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM