சப்னி அஹமட்-

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 2016ஆம் ஆண்டு, 2017ஆம்ஆண்டுகளின் பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுகளில் கல்முனைபிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் எதிர்வரும்செப்டம்பர் மாதம் மக்களிடம் கையளிக்கப்பதற்கான ஏற்பாடுகள்மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்ஏ,எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார பிராந்தியங்களுக்கு இடயில்மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான நடவடிக்கைதற்போது ஆராய்ந்து வருகின்றது. அந்தவகையில் கல்முனை சுகாதாரபணிமனை ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திகள்தொடர்பாகவும், இவ்வருடம் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள்தொடர்பாகவும் இன்று கல்முனை சுகாதார பணிப்பாளர்காரியாலயத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட்நஸீர் தலைமையில் இன்றூ (22) ஆராய்யப்பட்டது. அதன் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

360 மில்லியன் ரூபா நிதி கல்முனை சுகாதார பிராந்தியத்திற்கு 2016ஆம்ஆண்டு கிடைக்கப்பெற்றது. அவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்டஅபிவிருத்திகளுடன் இவ்வருட நிதிகளையும் ஒதுக்கி ஒலுவில்,ஆலம்குளம், பாலமுனை, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை,அன்னாமலை, இறக்காமம், திருக்கோவில், நைனாகாடு, கல்முனைபோன்ற வைத்தியசாலைகளுடன் இன்னும் பல வைத்தியசாலைகளுக்குஅதிக நிதி ஒதுக்கீடு மூலம் பல அபிவிருத்தி திட்டங்கள்மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆகவே குறித்த அபிவிருத்திகள் யாவும் மிகஅவசரமாக தேவைப்படுவதால் நாம் மிக சீக்கிரம்இவ்வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களிடம் கையளிக்கவேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இந் நிதிகளில், பிராந்திய வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கப்பட்டநிதிகள் தொடர்பாகவும், அங்கு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள்தொடர்பாகவும், அதில் உள்ள குறைபாடுகள் தொடர்பாகவும்ஆராய்யப்பட்டதுடன். கல்முனை பிராந்தியத்தில் உள்ளவைத்தியசாலைக்கு இவ்வருட நிதியில் சில அபிவிருத்திகளுக்காகஒதுக்கி எதிர்வரும் செப்டம்பர் மாதம் அனைத்து அபிவிருத்திகளையும்மக்களிடம் கையளிக்க வேண்டும் எனவும் இங்கு கிழக்கு மாகாணசுகாதார அமைச்சர் உத்தரவிட்டார்.

 

மிக விரைவில் உத்தியோக சில நிகழ்வுகளை நாம் மத்திய சுகாதாரஅமைச்சர் ராஜித சேனாரத்தனவினால் உத்தியோகபூர்வமாககையளிக்கவுள்ளோம் எனவும் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும்இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், வைத்தியசாலைகளில்மேற்கொள்ளும் அபிவிருத்திகளுக்கு வைத்தியசாலைகளின்வைத்தியர்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவமளித்துசெயற்படுமாறும் அங்கு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து கல்முனை, மட்டக்களப்பு பிராந்தியங்களுக்கானபுதிய வாகனங்களும் கையளிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள்பணிப்பாளர் முகாகனந்தன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின்உதவி செயலாளர் உசைனுடீன், மேற்பார்வை ப்ரேம், கிழக்கு மாகாணசுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரிவின் செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ்கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலாவுத்தீன், பிரதமகணக்காளர், பொறியிலாளர்கள், கட்டிட திணைக்கள அதிகாரிகள்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரிஉள்ளிட்டவர்கள் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM