இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை அங்கீகரித்து அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று (22)  விசேட எழுச்சிக் கூட்டம் நடைப்பெற்றது.

அனைத்து பலஸ்தீன நட்புறவு அமைப்புகள், அனைத்து மத தலைவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், அரசியல் காட்சிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம், கலைஞர்கள், சட்டத்தரணிகள் சங்கம் போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து  இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

“உலக அபிப்ராயத்தை மதிப்போம்! கிழக்கு ஜெரூஸலத்தை பலஸ்தீனத்தின் தலைநகராக ஏற்றுக்கொள்” (“Respect World Opinion! Accept East Jerusalem as the Capital of Palestine”) எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு  அரசியல் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட  கையொப்பமிட்டு  . இந்த தீர்மானம் எதிர்வரும் 12.01.2018ம் திகதி ஐக்கிய அமெரிக்க தூதுரகத்தில் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்துகொண்டதோடு, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி ஆகிய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்து உரை   நிகழ்த்தி   சிறப்பித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM