ஜனா­தி­ப­தியின் உத்­த­ரவை மீறி பல­வந்த போக்­குடன் செயற்­பட்டு இறக்­காமம் பகு­திக்குள் நுழையும்

பொது­பல சேனாவின் ஞான­சார தேர­ரையும் சிங்­கள ராவய பிக்­கு­களையும் உடன் கைது செய்ய வேண்டும் என விளை­யாட்­டுத்­துறை பிர­தி­ய­மைச்­சரும் திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எச்.‍எம்.எம்.ஹரீஸ் நேற்று சபையில் வலி­யு­றுத்­தினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை விசேட வியா­பாரப் பண்ட அற­வீட்டுச் சட்­டத்தின் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு வலி­யு­றுத்­தினார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

 
சிறு­பான்மை மக்­க­ளுக்கு அநீதி இழைத்த அர­சாங்­கத்தை தோற்­க­டித்து விட்டு ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் கூட சிறு­பான்மை மக்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­கின்­றது.
 
அம்­பாறை மாவட்­டத்தில் அனைத்து இன மக்­க­ளும் ஒற்­று­மை­யாக வாழந்து வரும் பிர­தே­சத்தில் பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் மற்றும் சிங்­கள ராவய பிக்­குகள் பல­வந்­த­மாக சென்று இறக்­காமத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான காணி­களை சுவீக­ரிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளனர்.
 
இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­யிட்டு மாய­க்கல்லி பகு­தியில் பல­வந்­த­மாக காணி சுவீக­ரிப்­ப­தனை தடுத்து நிறுத்­து­வ­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.
 
எனினும் ஜனா­தி­ப­தியின் உத்­த­ரவை மீறி ஞான­சார தேரர் மீளவும் அங்கு செல்ல முற்­பட்டார். எனி­னும் பொலிஸார் தலை­யிட்டு அதனை தடுத்து நிறுத்­தினர். இல்­லையேல் பாரிய இனக்­க­ல­வரம் ஏற்­பட்­டி­ருக்கும் .
 
இது தொடர்­பாக முன்­னைய ஆட்­சி­யிலும் குறிப்­பிட்டோம். எனினும் இது தொடர்பில் செவி­ம­டுக்­கா­ததினால் அளுத்­க­மவில் பாரிய இனக்­க­ல­வரம் ஏற்பட்டது.
 
எனவே ஜனாதிபதியின் உத்தரவை மீறி பலவந்த போக்குடன் செயற்படும் பொதுபல சேனாவின் ஞானசார தேரரையும் சிங்கள ராவய பிக்குகளையும் உடன் கைது செய்ய வேண்டும் என பிரதியமைச்சர் ஹரீஸ் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM