டெங்கு நோய் வேகமாக பரவுவது தொடர்பாகவும் அந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவும் டெங்கு ஒழிப்பு செயலணியை உடனடியாக ஒன்றுகூட்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தீர்மானித்தனைக்கு அமைய

டெங்கு நோய் வேகமாகப் பரவுவது தொடர்பாகவும் அந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும் மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் டெங்கு ஒழிப்பு செயலணி இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்று கூட்டப்பட்டது.

2017 ஆம் ஆண்டு இதுவரையில் (மே 15) நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 44,623 வரை அதிகரித்துள்ளதுடன், 115 மரணங்களும் இடம்பெற்றுள்ளன.

2014 ஆம் ஆண்டு 47,246 டெங்கு நோயாளர்களும் 97 மரணங்களும் இலங்கையில் பதிவாகியுள்ளதுடன், இந்த நிலைமை 2015 ஆம் ஆண்டு 29,777 நோயாளிகளும் 60 மரணங்களுமாகக் குறைப்பதற்கு சுகாதார மற்றும் நோய் தடுப்பு பிரிவுக்கு முடியுமாக இருந்தது.

மீண்டும் 2016 ஆம் ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,150 வரை அதிகரித்துள்ளதுடன், 90 மரண சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

மேலும் நோயாளர்கள் மற்றும் நுளம்புக்குடம்பிகள் தொடர்பான தரவுகளுக்கேற்ப கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இடர் பிரதேசங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன.

இந்த ஆபத்தான நிலைமையைக் கவனத்திற்கொண்டு டெங்கு பரவுவதை உச்ச அளவில் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய உடனடித் தீர்வுகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது அங்கு உரையாற்றிய ஜனாதிபதி;

தற்போது வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் தமது சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அரச மற்றும் தனியார் துறையினரிடமும் அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெங்கு ஒழிப்புக்காக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி தமது நேரடி பங்களிப்பை வழங்குமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் பிரதிநிதிகளிடமும் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று டெங்கு ஒழிப்புக்காக அரச மற்றும் தனியார் துறை இணைந்த தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் 03 மாதக் காலப்பகுதிக்கு டெங்கு ஒழிப்பு காலப் பகுதியாக பிரகடனப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட்நஸீர் கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பாக மேற்கொள்ளப்ப்ட்ட நடவடிக்கைகளையும், கிழக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான சாதக,பாதகமான விடயங்களையும் இக்கலந்துரையாடலின் போது எடுத்துரைத்தார்.

இக்கலந்துரையாடலின் போது, அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, வஜிர அபேவர்தன, பைஸர் முஸ்தபா, கயந்த கருணாதிலக்க, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர, பிரதி அமைச்சர் பைஷல் காசீம் ,மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, மாகாண சுகாதர அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் ஆகியோர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், அரசாங்க அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், டெங்கு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM