Web
Analytics
தமிழ் முஸ்லிம் ஒற்றுமையில் தேசிய மட்டத்தில் ஒரு தாக்கத்தினை உருவாக்குவதற்கு -அமைச்சர் ரவூப் ஹக்கீம் - Sri Lanka Muslim Congress
(எம்.எம்.ஜபீர்)
தமிழ் முஸ்லிம் ஒற்றுமையில்  தேசிய மட்டத்தில் ஒரு தாக்கத்தினை உருவாக்குவதற்கு இந்த சிறிய பிரதேசத்திலிருந்து

ஒரு பெரிய செய்தியை நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தலின் ஊடாக நாங்கள் நாட்டிற்கு கொண்டு சொல்வதற்கு தயாராக வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

 
நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் சாளம்பைக்கேணி வடக்கு 2ஆம் வட்டரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எல்.ஏ.இம்தியாசின் தேர்தல் பிரச்சார அலுவலத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
 
இவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல்; முதல் முறையாக வட்டார அடிப்படையில் வேட்பாளர்களை தெரிவு  செய்யப்படுகின்ற முறை புகுத்தப்பட்டு இருக்கின்றது. இழப்புகளையும் விரக்திகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் ஒரு இயக்கத்தில் இருக்க முடியாது இந்த பெரிய இயக்கத்தில் அதிகார காய்ச்சல் என்பது பிடித்துக் கொண்டு இந்த கட்சியை அழிக்க வேண்டும் என்று எங்கு போய் சேரவேண்டும் என்று தெரியாமல் அலைந்து பலர் திரிகின்றார்கள்.
 
இந்த நாவிதன்வெளி பிரதேசத்தின் அபிவிருத்தியில் குறைபாடுகள் இருந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல வருடங்கள் எதிர் கட்சியில் இருந்த போதிலும் இந்த கட்சியை பாதுகாப்பதில் இந்த பிரதேச போராளிகள் மிக உறுதியாகவும் மிக தைரியமாகவும் பல எதிர்ப்புகளை சமாளித்து இந்த பிரதேசத்தில் கட்சியை காப்பாற்றி வந்துள்ளனர்.
 
நாவிதன்வெளி பிரதேச சபையில் எங்களுடைய தமிழ் சகோதரர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டு வருகின்றனர். அவர்களுடைய தரப்பிலே கூடுதலான ஆசனங்கள் பெறுகின்ற போது ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பு அவர்களுக்கு போகலாம். நாங்கள் நட்புறவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்போடு செயல்படுகின்ற காரணத்தினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் அனுடைய செயல்பாடுகளில் ஒரு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் நானும் ஒரே மேடையில் இந்த மத்திமுகாம் பிரதேசத்தில் முதலாவது கூட்டத்தினை நடாத்தினோம். 
 
அப்படி எங்களுக்குள்ளேயே ஒரு ஒற்றுமையை கொண்டு வருவதன் மூலம் தேசிய மட்டத்தில் ஒரு தாக்கத்தினை உருவாக்குவதற்கு இந்த சிறிய பிரதேசத்திலிருந்து ஒரு பெரிய செய்தியை நாங்கள் நாட்டிற்கு சொல்வற்கு தயாராக வேண்டும். ஒரு அடையாளத்திற்காவது தெரிவு செய்கின்ற பிரதேசமாகவும் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கு ஒரு அடையாள சின்னமாகவும் இப்பிரதேசம் இருக்க வேண்டும் என்பற்காக நாங்கள் தேர்ந்தெடுத்த பிரதேசம் வன்முறை கலாச்சாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆபத்துக்களையும் அழிவுகளையும் சந்தித்த பிரதேசம். அவ்வாறு இருந்த போதிலும் கூட சமாதான காலத்திலே முன்பு இருந்ததை விடவும் கூடுதலான  ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எங்கள் மத்தியில் காணப்படுகின்றது. இந்த பின்னணியிலேயே தான் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும். எதிர்கால அரசியலை கையாளுவதற்கு தமிழ் முஸ்லிம்களுடைய ஒற்றுமையைப் பற்றி சிந்திக்கின்ற ஒரு கால கட்டத்தில் இருக்கின்றோம்.
 
தேர்தல் காலங்களில் எங்களுடைய ஆசனங்களை தக்கவைத்துக் கொள்வதற்கு சிறந்த வியூகங்களை வகுத்துள்ளோம் அம்பாரை மாவட்டத்தில் பெரும்பான்மையாக எல்லாப் பிரதேசங்களிலும் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகின்றோம். ஐக்கிய தேசிய கட்சி பட்டியலை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் என்றும் எங்களுடைய சின்னத்தில் கேளுங்கள் என்றும் ஐக்கிய தேசிய கட்சி தயவாக கேட்கின்ற நேரத்தில் கேட்கும் போது அதனைக் கொண்டு நாங்கள் எங்களுடைய பிரதேச அபிவிருத்திகளை சிந்தித்து அபிவிருத்தி செய்வதற்கு கூடுதலான அழுத்தங்களை கொடுப்பதற்காக பிரச்சினைகள் வருகின்ற போது காணிகள், இடங்கள் பறிபோகின்ற நிலையில் சில இடங்களில் திடீரென சிலைகள் முளைக்கின்றது இதனை தடுக்க ஐக்கிய தேசிய கட்சியில் போட்யிடுவதன் மூலம் உரிமையுடன்  தட்டிக் கேட்கக்கூடியதாகவிருக்கும் என்ற காரணத்திற்காகவே ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் களமிறங்கியுள்ளோம்.   நாவிதன்வெளி பிரதேசத்தில் அதிகப்படியான ஆசனங்களை கைப்பற்றுவதுடன் மூன்று வட்டாரங்களிலும் 4ஆசனங்களை கைப்பற்ற வேண்டும் கைப்பற்றி சந்தர்ப்பம் வாய்க்கின்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்போடு ஆட்சி அமைப்பதற்கும் எங்களால் முடியும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் எனவும் தெரிவித்தார்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM