தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் றஹீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் அப்பிரதேசத்திற்கு நீர்ப்பாசன பொறியியலாளர்களோடு விஜயம் செய்து வென்ராசன் குளத்திலிருந்து பரவிபாஞ்சான் குளத்திற்கு நீரைக் கொண்டுவருவது சம்மந்தமாக ஆராயப்பட்டு அதற்கான சாத்திய கூற்றரிக்கையை தாயாரிக்கும் வேலைகளை ஆரம்பிக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப் பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 3000 க்கும் மேற்பட்ட வயற்காணிகள் நீரைப் பெறக்கூடியதாக இருக்கும். இவ்விஜயத்தின்போது பிரதேச சபை உறுப்பினர்களான இமாம், சித்தி பரீதா ஆகியோருடன் கட்சியின் முக்கியஸ்தரகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More