ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கண்டி மாவட்ட மத்திய குழுக்கூட்டம் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) கண்டி தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போதே சம்பத்தப்பட்ட தொகுதி அமைப்பாளர்களுக்கும்,கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

 

நாடளாவிய ரீதியில் அமைச்சர் ஹக்கீமின் அமைச்சுக்கூடாக நடைபெற்று வரும் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் கணிசமான அளவானது கண்டி மாவட்டத்திலும் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் பல வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டும் உள்ளன. ஆனால் இன்னும் சில வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாமலும், ஆரம்பிக்கப்படாமலும் இருப்பது தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

எனவே கண்டி மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற  அபிவிருத்தித் திட்டங்களில்  எத்தனை வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாத வேலைத்திட்டங்கள் எத்தனை என அமைச்சரினால் கேள்வி எழுப்பப்பட்டது.

 

தொடர்ந்து நடைமுறைப் படுத்தப்படாத அபிவிருத்தி வேலைத்திட்டங்களை எதிர்வரும் புதன்கிழமை தனக்கு அறிக்கை சமர்பிக்குமாறு அமைச்சரினால் மத்திய குழுவிடம் கோரப்பட்டது.

 

கண்டி மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களுக்கும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால்

அக்குரண – 2.4 மில்லியன்,உடுநுவர – 1.5 மில்லியன், பாத்ததும்பர – 1.05 மில்லியன், கம்பளை – 1 மில்லியன், நாவலப்பிட்டி – 9 இலட்சம் , பூஜாப்பிட்டிய – 5 இலட்சம் ,ஹரிஸ்பத்துவ – 5 இலட்சம் , தெல்தெனிய –4.5 இலட்சம் , பன்வில – 4 இலட்சம் , குண்டசாலை – 3 இலட்சம் , கலகெதர – 3 இலட்சம்

யட்டிநுவர – 3 இலட்சம் , ஹத்தரளியட்ட – 2.5 இலட்சம் , தெல்தோட்ட – 1 மில்லியன் , பாத்தா ஹேவா ஹெட்ட –2 மில்லியன்

ஆகிய பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் சில வேலைத்திட்டங்கள் இன்னமும் நிறைவடையாமல் இருக்கின்ற நிலை காணப்படுவதாகவும், இதை இவ்வாண்டுக்குள் நிறைவு செய்ய துரிதப்படுத்துமாறும் மத்திய குழுவிற்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

 

இதனைதொடர்ந்து நடைபெறவுள்ள வட்டார முறை தேர்தலில் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பாகவும் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

 

நாச்சியாதீவு பர்வீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM