திருகோணமலை மனையாவெளி பெரியக்கடை ஜும்மா பள்ளிவாசல் இனம் தெரியாத சிலரால் (03) சனி அதிகாலை 12.30 மணியளவில் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன ஐந்து மண்ணெண்ணெய் போத்தல்கள் அடங்கிய மண்ணெண்ணெய் வீச்சு இடம்பெற்றுள்ளது இதன் போது பள்ளிவாசலின் உள் பகுதியின் விரிப்புக்கள் மற்றும் உடைமைகள் என்பன சேதமடைந்துள்ளன.

குறித்த பாதிக்கப்பட்ட பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன் பள்ளிவாசல் தலைவர் அலி உட்பட்ட நிர்வாக குழுவினரை சந்தித்து இதுவிடயமாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக தெறிவித்ததுடன் தொடர்ந்தும் பொலிசாரால் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்தார்

இதன் பொது அப்பிரதேசத்தை சேர்ந்த முன்னால் மாகாண சபை உறுப்பினர் பரசுராமணம் சம்பவ இடத்திற்க்கு வருகை தந்திருந்தார்

இதேவேளை திருகோணமலை பெரிய கடை ஜும்மா மஸ்ஜித்தில் (மனையாவளி) இன்று அதிகாலை நடைபெற்ற பெற்றோல் குண்டுத்தாக்குதல்   சம்பவத்தை வன்மையா கண்டிப்பதுடன்,  அண்மையில் உள்ள CCTVயில் 12.39 ற்கு 4 மோட்டார் சைக்கிளில் வந்த 07 நபர்களினால் இக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் இது சம்பந்தமாக திருகோணமலை துறைமுக பொலிஸாரை விரிவான விசாரனையை மேற்கொண்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் j.m.லாஹிர்  நேரில் சென்று வேண்டுகோள்விடுத்துள்ளதுடன்.

மேலும் இவ்வாறான சம்பவங்களை ஏற்படுத்தி இனக்கலவரமொன்றை ஏற்படுத்த முனைவது தெளிவாக தெரிகிறது எனவே இந் றமழான் மாதத்தில் முஸ்லிம் சகோதரர்களை பொறுமை காக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM