Web
Analytics
திருமலை மாவட்டத்தில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமாக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது சம்மந்தமான கலந்துரையாடல் - Sri Lanka Muslim Congress

திருகோணமலை பட்டிணமும் சூழல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னம்பிள்ளைச்சேனை, கருமலையூற்று, கப்பல்துறை, முத்துநகர், நாச்சிக்குடா, வெள்ளைமணல் போன்ற பிரதேசங்களின் குடியிருப்புக்காணிகள் மற்றும் விவசாயக் காணிகள் 1982ம் ஆண்டு காலப்பகுதிகளில் மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியினால் வர்த்தமானி அறிவித்தள் மூலம் இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமாக்கப்பட்டிருந்தது.

இதனால் அப்பிரதேசத்தில் வசித்துவரும் மக்கள் பாரிய பிரச்சினைகளைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர். அக்காணிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தொளபீக் அவர்கள் இன்று (21) மாலை 4 மணியளவில் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திஸ்ஸநாயக்க அவர்களை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM