Web
Analytics
தென் கொரியாவில் நடைபெறும் சர்வதேச மகாநாட்டில் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா பங்கேற்பு - Sri Lanka Muslim Congress

ஐக்கிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் 32ஆவது சர்வதேச தலைமைத்துவ மாநாடு தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெறுகிறது.

உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் அரசியல் பிரதிநிதிகள், மத தலைவர்கள் என பலரும் கலந்து கொண்ட குறித்த மகாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சருமான அலி சாஹிர் மௌலானா அவர்கள் கலந்து சிறப்பிக்கிறார்கள்.

உள்ளூர், தேசிய , சர்வதேச ரீதியில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளின் போதான சரியான தீர்வுகளை நோக்கியதாக சர்வதேச நாடுகளின் அரசியல் சார் பிரதிநிதிகள் , மத தலைவர்கள் , சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் குறித்த மாநாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM