Web
Analytics
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா - Sri Lanka Muslim Congress

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தொளபீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வீடமைப்பு மற்றும் புணர் நிர்மாணத் துறை அமைச்சர் சஜித் பிரமதாச அவர்களின் உத்தரவின்பேரில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 30 வீட்டுத் திட்டம் கிண்ணியா நடுஊற்று கிராமத்தில் அமைப்பதற்காக நேற்று (11) மாலை 4.30 மணியளவில் எம்.எஸ்.தொளபீக் அவர்களினால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கௌரவ நிகார், கிண்ணியா நகர சபையின் பிரதித் தவிசாளர் நளீம், கிண்ணியா நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் றியாத் மற்றும் பயானாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM