ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பொருத்தமட்டில் இன்று முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை பலத்தை வைத்து அரசுடனும், சர்வதேச அரங்கிலும் முஸ்லிம் மக்களின் பிரச்சினை குறித்து புதிய அரசியலமைப்பில் எமது சமூகத்தின் நிலை குறித்து பேசிவருகின்ற இச்சந்தர்ப்பத்தில் இன்று முஸ்லிம் சமூகத்தின் பேரியக்கத்தினை இல்லாமல் செய்வதற்கும், அதனை பலமிழக்கச் செய்வதற்கும் இக்கட்சியின் மூலம் அரசியல் முகவரியினைப் பெற்ற எமது முஸ்லிம் அரசியல் தலைவர்களும், அவர்களது முகவர்களும் மக்களிடையே கிராமம் கிராமாக வந்து அதைதருகின்றோம், இதைத்தருகின்றோம் என்று பொய் வாக்குறுதிகளை வழங்குகின்றார்கள் இவ்வாறாவர்களுக்கு மீண்டும் சோரம்போகாமல் சிந்தித்து எமது சமூகத்தின் உரிமைக்குரலான முஸ்லிம் காங்கிரஸ்தான் என்று சம்மாந்துறை மக்கள் என்பதனை இத்தேர்தலில் நிருபித்துக்காட்ட வேண்டும்.


ஒவ்வொரு தேர்தல்களின் போதும் கட்சி மாறி பிழையான தீர்மானங்களை எடுத்து தனக்கென்ற கொள்கை இல்லாமலும் சம்மாந்துறை மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடாத்தி வருகின்ற முன்னாள் தவிசாளை நௌஷாட்டினை இத்தேர்தலில் தோற்கடித்த வேண்டும். அதற்காக சம்மாந்துறை மக்கள் யானைச்சின்னத்திற்கு வாக்களித்து அவருக்கு நல்தொரு பாடத்தினை புகட்ட வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.


உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபையின் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் ஆறாவது வட்டாரமான சம்மாந்துறை வட்டாரத்தில் போட்டியிடும் ஸபீக் இஸ்மாயிலின் தேர்தல் பிரசார அலுவலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே -ஒவ்வொரு தேர்தல்களின் போதும் கட்சி மாறி பிழையான தீர்மானங்களை எடுத்து தனக்கென்ற கொள்கை இல்லாமலும் சம்மாந்துறை மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடாத்தி வருகின்ற முன்னாள் தவிசாளை நௌஷாட்டினை இத்தேர்தலில் தோற்கடித்த வேண்டும். அதற்காக சம்மாந்துறை மக்கள் யானைச்சின்னத்திற்கு வாக்களித்து அவருக்கு நல்தொரு பாடத்தினை புகட்ட வேண்டும்.

Ansar Cassim 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More