தோப்பூர் அஸ்ஸிபா பாடசாலையின் மாணவர் விளையாட்டு துறையில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியதை கெளரவிக்கும் நிகழ்வு 01.07.2017 காலை 8.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது

நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் பிரதம அதிதியாகவும்,கெளரவ விருந்தினர்களாக முன்னால் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் நிஸ்மி,தோப்பூர் கோட்டக்கல்வி பணிப்பாளர்,உதவி கல்வி பணிப்பாளர்,அதிபர்கள்,பள்ளிவாசல் நிர்வாகிகள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவனுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

இதன்போது தோப்பூர் அஸ்ஸிபா பாடசாலைக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரூபா 40000/- பெறுமதியான ஒளி பெருக்கி தொகுதி பாடசாலை அதிபரிடம் 01.07.2017 உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

சித்தீக் முஹிதீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM