பாலமுனைக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத்தலைவருக்கு கல் எறிந்ததாம், கூட்டத்தை இடை நடுவில் விட்டு தலைவர் ஓடினாம் என்று மயில் குஞ்சுகள் தனது சுய நினைவாற்றலை இழந்து தன் கற்பனையை எழுத்து வடிவில் முக நூலில் பதிவேற்றம் செய்கின்றார்கள்.

இவர்களுக்கு தெரியாது அங்கு என்ன நடந்தது என்று முஸ்லிம்களின் தேசியத்தலைவரை போராளிகள் தம் உயிரைக் கொடுத்தாவது அவரிற்கு சேதம் வராதவாரு பாதுகாப்பார்கள் என்பதில் அச்சமில்லை. இருந்தாலும் நேற்று தேசியத்தலைவர் சுமார்45நிமிடத்திற்கும் அதிகமாக உரையாற்றினார்.

அதில் எதுவித தடையும் இன்றி மிகச்சிறப்பாக தனக்கு பாலமுனையில் இருந்து அன்சிலினால் தொடுக்கப்பட்ட கேள்விகளுகு சிறந்த முறையில் பதில்கள் வழங்கப்பட்டது மாறாக இந்த மயில் குஞ்சுகள் அற்ப சில்லறைக்காக எழுதும் வதந்திகளை பார்க்கும் போது மயிலின் வங்குரோத்து அரசியல் தெளிவாக விளங்குகின்றது.

பாலமுனைக் கூட்டத்தில் ஒருசில அன்சிலின் அடியாட்கள் மின்சாரம் தடை செய்வதற்காக சைக்கிள் செயினை மின்சாரக் கம்பி மீது அடித்து மின்சாரத்தை தடை செய்தார்கள். இதனை பொருட்படுத்தாமல் உடனடியாக பாலமுனை மத்திய குழு ஜெனரட்டர் மூலம் மின் வழங்கி கூட்டத்தை வெற்றிகரமாக கொண்டு சென்றனர்.

அதிலும் குறிப்பாக கல் எறியப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அது எங்கு இடம் பெற்றது என்று மயில் குஞ்சுகளிடம்தான் கேட்கவேண்டும்..பாலமுனை கட்சிப் போராளிகள் எதிரிகளை கதி கலங்க செய்துள்ளார்கள்..

ஆனால் கூட்டத்தை குழப்ப முயற்சித்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதனை பாலமுனை கட்சிப்போராளிகளால் சிறப்பான முறையில் முறியடிக்கப்பட்டது. கூட்டம் நடை பெற்றுக் கொண்டு இருக்கும் போது வெளியில் பாதுகாப்பு படையினரோடும் கட்சிப் போராளிகளோடும் சண்டை போடுவது ஒரு சிலரினால் கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அது கூட்டத்திற்கும் தலைவருடைய பேச்சிற்கும் எதுவித இடையூறும் இல்லாமல் தலைவர் தனது உரையை முழுமையாக நிகழ்த்தியே சென்றார்   என்பதை உங்களிடம் நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. முகநூல் நேரலை பார்ப்த்தால் புரியும்.

அத்துடன் மயில் கட்சி போல் இவ்வாறான கேவலமான அரசியல் செய்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எக்காலத்திலும் வாக்கு சேகரித்த வரலாறுகளும் இல்லை என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டு கூறகின்றேன்.

முஹம்மது முபாரிஸ் 
மருதமுனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM