Web
Analytics
நகர திட்டமிடல் மற்றும்  நீர் வழங்கல் அமைச்சினால் ஏறாவூர் பிரதேசத்தில் 80 மலசல கூடங்கள் - Sri Lanka Muslim Congress

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களின் வேண்டுகோளில் நகர அபிவிருத்தி -நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் ஏறாவூரில் மலசலகூடம் அற்ற 80 பேருக்கு மலசல கூடம் அமைப்பதற்கு மாணியமாக தலா 35000/= ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் ஏறாவூர் பற்று பிரதேசத்தில் 50 மலசல கூடங்களை நிர்மாணிப்பதற்கும் , ஏறாவூர் நகர சபை எல்லைக்குள் 30 மலசல கூடங்களை அமைப்பதற்காகவும் குறித்த நிதி மாணிய அடிப்படையில் வழங்கப்படுகிறது.

குறித்த செயற்திட்டம் ஏறாவூர் நகர சபை , ஏறாவூர் பற்று பிரதேச சபைகளின் முழுமையான ஒத்துழைப்புடன் ஏறாவூர் பிரதேச செயலகத்தினால் அமுல்படுத்தப்பட்டு வருகிறது .
செயற்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுடனான கலந்துரையாடலும் முதற்கட்ட நிதி வழங்கலும் இன்று காலை ஏறாவூர் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பிரதேச செயலாளர் வீ. யூசுப் , திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் ருவைத் , நகர சபை சார்பில் உள்ளூராட்சி உதவி அதிகாரி ஆரிப் பிரதியமைச்சரின் செயலாளர் சயீட் , பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி மலசலகூட நிர்மாண செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏறாவூர் நகர சபை தவிசாளர் வாசித் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் நா, கதிரவேல் ஆகியோர் தங்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM