Web
Analytics
நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த பொறி­முறை ஒன்று அவ­சியம் கனே­டிய உயர் ஸ்தானி­க­ரிடம் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டு - Sri Lanka Muslim Congress

இனங்­க­ளுக்­கி­டையில் ஏற்­ப­டு­கின்ற பிணக்­கு­க­ளுக்கு இணக்கத் தீர்­வு­களை காண்­ப­தற்கும் இனங்­க­ளுக்­கி­டையில் நிலவும் விரி­சல்­களை வெகு­வாகக் குறைத்து சமூ­கங்­க­ளு­க்கு மத்­தியில்  நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்து வ­தற்­கு­மான பொறி­முறை ஒன்றின் அவ­சியம் பற்றி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இலங்­கைக்­கான கனே­டிய உயர் ஸ்தானி­க­ரிடம் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

கனே­டிய உயர் ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் தலை­மை­யி­லான குழு­வினர் நேற்று புதன் கிழமை பிற்­பகல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸ­லாமில்  முஸ்லிம் காங்­கிரஸ் பிர­மு­கர்­களை சந்­தித்­தனர்.  

இச்­சந்­திப்பில் சுகா­தார பிர­தி­ய­மைச்சர் பைசல் காசிம், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ். தௌபீக் முத­லி­யோ­ருடன் ஒட்­டாவா நகரில் செயற்­படும் கனே­டிய பூகோள விவ­கார அமைப்பின் பிர­தி­நிதி பயாஸ் மஞ்ஜி, கனே­டிய உயர் ஸ்தானி­க­ரா­லய அர­சியல் பொரு­ளா­தார, வர்த்­தக ஆலோ­சகர் ஜெனிபர் ஹார்ட் ஆகி­யோரும் பங்­கு­பற்­றினர். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ரையும் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்த பிரஸ்­தாபக் குழு­வினர் யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் நாட்டில் படிப்­ப­டி­யாக ஏற்­பட்­டு­வ­ரு­கின்ற மாற்­றங்கள் பற்­றியும் இன­மு­ரண்­பா­டு­களும் கசப்­பு­ணர்­வு­களும் குறை­வ­டைந்து வரு­கின்ற தன்மை பற்­றியும் அறிந்­து­கொள்­வதில் அதிக ஆர்வம் செலுத்­தினர்.

யுத்­த­கா­லத்­திலும் பின்­னரும் தமிழ் மக்­க­ளி­ட­மி­ருந்து பாது­காப்புப் படை­யி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட காணி­களை மீளக் கைய­ளிக்கும் நட­வ­டிக்­கைகள் வட­கி­ழக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற சூழ்­நி­லையில், முஸ்லிம் மக்­க­ளி­ட­மி­ருந்து அர­ச­ப­டை­யி­ன­ராலும் போராட்டக் குழுக்­க­ளாலும் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டும் அப­க­ரிக்­கப்ட்டும் இருந்த காணி­களை அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு மீண்டும் கைய­ளிப்­பதில் காட்­டப்­படும் அச­மந்­தப்­போக்கில் மாற்றம் ஏற்­பட்­டாக வேண்டும் என அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

அத்­துடன், அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்தம், அதி­காரப் பர­வ­லாக்கம், தேர்தல் மறு­சீ­ர­மைப்பு என்­ப­ன­பற்றி அமைச்சர் தெளி­வு­ப­டுத்­தி­ய­தோடு குறிப்­பாக உத்­தேச தேர்தல் சீர்­தி­ருத்தம், உள்­ளூ­ராட்சி சமை­க­ளுக்­கான எல்லை மீள் நிரு­ணயம் என்­ப­வற்றின் விளைவாக சிறு­பான்மைக் கட்­சி­களும் சிறிய கட்­சி­களும் எதிர் நோக்கும் ஆபத்­துக்­க­ளையும் சுட்­டிக்­காட்­டினார்.

மாகாண சபை­களின் நிரு­வா­கத்தைப் பொறுத்தவரையில் ஏனைய மாகா­ணங்­களில் ஆளு­நர்கள் ஒரு மெத்­தனப் போக்­கையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களின் ஆளு­நர்­கள் கடி­னப்­போக்­கையும் கையாண்டு வரு­வது குறித்தம் அமைச்சர் ஹக்கீம் விசனம் தெரி­வித்தார்.

குறிப்­பாக வரவு – செலவுத் திட்­டத்தில் கிழக்கு மாகா­ணத்­துக்­கான ஒதுக்­கீட்டில் காட்­டப்­படும் பார­பட்சம், நிரு­வாகக் கட்­ட­மைப்பில் காணப்­படும் இழு­பறி நிலை, வளப்­பங்­கீட்டின் சமத்­து­வ­மின்மை முத­லி­ய­வற்­றிலும் தனது அதி­ருப்­தியை அவர் வெளி­யிட்டார். 

இங்கு கருத்துத் தெரி­வித்த கட்­சியின் பிரதித் தேசிய அமைப்­பா­ளரும் சுகா­தாரப் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான பைஸல் காசீம், கிழக்கு மாகா­ணத்தில் குறிப்­பாக மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை மாவட்­டங்­களில் கைத்­தறி நெசவுத் தொழிலை மேம்­ப­டுத்­து­வ­தற்கும் அதற்­கான சந்தை வாய்ப்­புக்­களை வெளி­நா­டு­களில் ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்கும் கிழக்கு மாகா­ணத்தில் உல்­லாசப் பிர­யா­ணத்­து­றையை ஊக்­கு­விப்­ப­தற்கும் கனே­டிய அரசின் ஒத்­து­ழைப்பை எதிர்­பார்ப்­ப­தாகத் தெரி­வித்தார்.

உயர் ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் கருத்­து­ரைக்­கும்­போது, கனே­டிய அரசு பல்­லி­ன­மக்கள் வாழும் அந்த நாட்டில் சகல சமூ­கங்­க­ளி­னதும் தனித்துவத்­துக்கு உரிய மதிப்பளித்து வருவதாகவும் தத்தமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் உடைகளை அணிவதற்கு இடமளித்திருப்பதாகவும் உதாரணமாக படையிலும் பொலிஸிலும் பணியாற்றும் சீக்கியர்கள் தங்களின் பாரம்பரிய தலைப்பாகையை அணிவதற்குக் கூட வாய்ப்பு அளித்திருப்பதாகவும் அவற்றையிட்டுத் தமது நாடு பெருமிதம் அடைவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை மக்களுக்கு தமதுநாடு தொடர்ந்தும் உதவிவருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM