கல்குடா செய்தியாளர்.

இந்நாட்டில் யார் பிழை செய்தாலும் இந்நாட்டின் சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்பட வேண்டும். இதனைப் பாதுகாக்க பிழை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா தெரிவித்தார்.

கே லங்கா சொலூசன் நிறுவனத்தின் அறிமுகமும் இப்தார் நிகழ்வும் ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

திருகோணமலை மலையாவெளி பெரியகடை ஜும்ஆப் பள்ளிவாயல் தாக்குதல் சம்பவமானது, முஸ்லிம்களுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள பிரச்சனையல்ல. முழு நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனை. தெமட்டகொட பள்ளிவாயலில் தொழுகைக்குச் செல்லும் போது ஐரோப்பிய தூதுவர்களிடம் எமது நாட்டின் நிலைமைகள் பற்றி நானும் சில அரசியல்வாதிகளும் தெரிவித்தோம்.

இங்கு ஏற்பட்டுள்ள நிலைமையானது முப்பது வருட காலமாக கஷ்டப்பட்ட பிரச்சனைகள் மாறி சமாதானம் நல்லிணக்கம் வரவேண்டுமென்ற நிலையிலிருக்கின்ற எங்களுக்கு நல்லிணக்கத்திற்கே ஏற்பட்ட ஒரு பிரச்சனை.

பல்வேறு விதமான பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாட்சி மூலமாக ஒரு நல்ல தீர்வு கிடைக்குமென்று எதிர்பார்த்த நேரத்திலே இந்த அரசாங்கத்திலும் கூட சவால்கள் ஏற்பட்டவொரு சூழ்நிலையுள்ளது. இந்நாட்டில் யார் பிழை செய்தாலும், இந்நாட்டின் சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்பட வேண்டும். இதனைப் பாதுகாக்க பிழை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக சிறுபான்மை இன மக்கள் நல்லிணக்கத்தை எதிர்பார்க்கின்றார்கள். நல்லாட்சி மூலம் பல தீர்வுகளை எதிர்பார்க்கின்றார்கள். மாறாக, பிரச்சனைகள் இன்னும் பூதாகரமாகப்படுகின்ற ஒரு சூழ்நிலையிலே எமது நாடு போய்க்கொண்டிருப்பதைத் தட்டிக்கேட்க வேண்டிய தேவை நம்மத்தியிலுள்ளது.

இந்த நாட்டிலே யார் பிழை செய்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மனித உரிமைகள் மீறப்படுகின்ற நேரத்திலே தட்டிப் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையில் நாங்கள் இருக்கின்றோம் என ஐரோப்பிய தூதுவர்கள் கூறினார்கள்.

குருநாகல், திருகோணமலை, இறக்காமம், காலி உட்பட பல இடங்களில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்ற சம்பவத்தின் பின்னணியிலுள்ளவர்கள் என்ன செய்தார்கள் என்பது பற்றி சொல்லியிருக்கின்றோம்.

ஊடகங்கள் தகவல்களை வழங்குகின்ற நேரத்தில் உண்மைத் தன்மையாக மக்களுக்கு கொடுக்கின்ற நேரத்தில் உரியவர்கள் சரியான முறையில் விடயங்களைப் புரிந்து நல்ல தீர்வுகளைத் தரக்கூடியவர்களாக அமைவார்கள் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM