மாறி வந்த அரசாங்கங்களால் கைவிடப்பட்ட, ஒரு சிறு பகுதி மக்கள் வாழும் நிக்கவரட்டிய-ஒட்டுக்குளம் பிரதேசத்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைத்தார் கௌரவ அமைச்சர் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்.

நேற்று (29)  வட மேல் மாகாண சபை உறுப்பினரும், குருநாகல் மாவட்ட ஸ்ரீ மு காங்கிரசின் அமைப்பாளருமான சட்டத்தரணி ரிஸ்வி ஜவகர்ஷா அவர்களின் கைகளால் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO Plant ) பொருத்தும் வேலை ஆரம்பமானது. 

மகிழ்ச்சியில் ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வு பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களின் ஒரு பெருநாளாக நான் கண்டேன். மிக்க குறுகிய காலத்தில் தலைவருடன் உரையாடி இதை பெற்றுத் தந்த ரிஸ்வி ஜவஹர்ஷாஹ் அவர்களுக்கு அந்த பிரதேச மக்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வில் நிக்கவரட்டிய ஸ்ரீ மு காங்கிரஸ் அமைப்பாளர் சகோதரர் ரிஸ்வி, பிரதேச சபையின் செயலாளர், மற்றும் அமைச்சரின் குருநாகல் மாவட்ட இணைப்பாளர் ஷாம் மௌலானா, தொழில் அதிபர் சாபீர் மன்சூர்  உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த இயக்கம் தொடர்ந்து மக்களின் எண்ணிக்கையை கருத்திட் கொள்ளாமல், அவர்களின் பிரச்சினையை கண்டு உதவி வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM