உலக தாதியர் தின நிகழ்வுகள் நிந்தவூர் தள வைத்தியசாலையில் அண்மையில் (12)  இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கெளரவ பைசால் காசிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன் போது உரையாற்றிய பிரதி அமைச்சர், வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர்களின் பற்றாக்குறை எதிர்வரும் மாதங்களில் சுமார் 1600 புதிய தாதியர்களின் நியமனத்தினால் குறைக்க தாம் எதிர்பார்த்திருப்பதாகவும், எதிர்வரும் காலங்களில் மேலும் சுமார் 33000 வைத்திய மாணவ தாதியர்களினால் அப்பாற்றக்குறை நிரப்பப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு இலங்கை தாதியர்களின் தரத்தினை தாம் சர்வதேசத்தில் மிளிரக்கூடிய தரத்திற்கு கொண்டு செல்ல செயற்படுவதோடு, அதற்கென விஷேடமாக தாதியர்களுக்கென்று பட்டப்படிப்பு கற்கைநெறிகளை சுகாதர அமைச்சு முன்னெடுத்துக்கொண்டிருப்பதாகவும், இதன் மூலம் தாதியர்கள் தங்களுடைய தரத்தினை உயர்த்திக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வில் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், தாதியர்கள் உட்பட மேலும் பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM