நிந்தவூர் நெனசல அறிவகத்தில் சீ.ஏ.ஏ கனணி பயிற்ச்சியை பூர்த்தி செய்த 60 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெஸ்ட் ஒப் யூத் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் நெனசல அறிவகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.புஹாது தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் கலந்துகொண்டதுடன், அதிதிகளாக இலங்கு போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிரதம பிராந்திய முகாமையாளர் ஏ.எல்.சித்தீக், முன்னாள் கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.அஹமத், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தொழில்நூட்ப உத்தியோகத்தர் எம்.எம்.சக்கி அஹம்மட், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் வெஸ்ட் ஒப் யூத் சமூக சேவைகள் அமைப்பின் பிரதிநிகளினால் பொன்னடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
JAFEER M MAHROOF
Displaying 20170312_180312.jpg
Displaying 20170312_182659.jpg
Displaying 20170312_182706.jpg
Displaying 20170312_171925.jpg
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM