தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் பிரதான காரியாலய குழுவினர் இன்று (17) மாலை 2.30 மணியளவில் கிழக்கு பிராந்திய சேவை நிலையமான திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளனர்.
  
இதன் விடயமாக 5 எஸ் முறைமை தொடர்பான அலுவலக முறைமையினைக் கண்காணித்து சென்றுள்ளதுடன் இது இலங்கை முழுவதும் காணப்படும் தேசிய நீர்வழங்கல் பிராந்திய சேவை நிலையங்களில் மொத்தமாக கண்காணிக்கப்பட்டு சிறந்த முறையில் 5எஸ் தெரிவில் வெற்றி பெற்ற பிராந்திய நிலையத்துக்கு விருது வழங்கப்படவுள்ளதாகவும் கிழக்கு பிராந்திய பொது முகாமையாளர் எஸ்.ஏ.ரசீட் தெரிவித்தார் 
 
இதில் கிழக்கு சேவை நிலையத்தின் பொது முகாமையாளர் எஸ்.ஏ.ரசீட்  பிராந்திய முகாமையாளர் யு.கே.எம்.முஸாஜித் உதவி பொது முகாமையாளர் என்.சுடேசன் மாவட்ட பொறியியலாளர் எல்.சுபாகரன் உட்பட ஊழியர்களும் பங்கேற்றனர்
 
 இதன் போது இதனை நன்குணர்ந்து வேலையில் ஈடுபட்ட அனைவருக்கும் முகாமையாளர் நன்றியினையும் இறுதி நிகழ்வின் போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM