Web
Analytics
நீர் நமது உயிரிலும் மேலான சொத்து – 2030 ஆண்டுக்குள் அனைவருக்கும் தூய குடிநீர். - Sri Lanka Muslim Congress
– நாச்சியாதீவு பர்வீன் –

உலகின் 75 விகிதம் நீரினால் சூழப்பட்டுள்ளது. வெறும் 25 சதவிகித நிலப்பரப்பில் தான் மனிதன் உற்பட பல உயிரினங்கள் வாழ்கின்றன. ஆனால் என்னதான் 75 விகிதம் நீர் நாம் வாழும் நிலத்தைச் சுற்றி இருந்தாலும் அவை நமது தாகம் தீர்க்கின்ற நிலையில் இல்லை மாறாக அவை உப்புக்கலந்த அருந்துவதற்கு உகந்தவையாக இல்லாமலே இருக்கின்றது. தொழின்நுட்பம் உயர்வைடைந்துள்ள நாடுகளில் உப்பு நீரினை தூய குடிநீராக மாற்றியமைக்கின்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை நடை முறைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இதே தொழிநுட்பத்தினூடாக இந்தியாவில் சென்னையில் குடிநீர் பெறப்பட்டு பாவனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இத்திட்டம் இலங்கையில் இன்னும் சாத்தியப்படாமலேயே இருக்கின்றது. அதற்கான பலகாரணங்களை அடையாளப்படுத்த முடியும்.

நீர் நமது அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத மிகப்பெரிய வளமாகும். மனிதனின் வாழ்க்கையோடு மட்டுமல்லாமல் உலகில் இருக்கின்ற அசையும்,அசையா எல்லா உயிரினங்களுக்கும் அத்தியாவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. நாம் வாழுகின்ற பூமியை சுற்றி முற்றுமுழுதாக நீர் சூழ்ந்திருந்தாலும் அவை பாவனைக்கு உகந்த தூய நீராக இல்லை மாறாக அவை உவர்ப்பு நீராகவே காணப்படுகின்றன இதனால் மனிதன் தனது அன்றாட தேவைக்கு போதுமான அளவில் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பலத்த சிரமத்தை மேற்கொள்கின்றான். 
 
உலகில் நான்கில் ஒருவருக்கு மாத்திரமே தூய குடிநீர் கிடைப்பதாக உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் கூறுகின்றன. வருடாந்தம் மனித இனத்தின் பெருக்கம் அதிகரித்துக்கொண்டே போகின்ற சூழ்நிலையில் நீர் வளமானது அருகிக்கொண்டே போகின்ற ஒரு நிலவரத்தை அவதானிக்க முடிகின்றது. இலவசப்பண்டமாக இருந்த நீர் வளமானது இப்போது வியாரப்பண்டமாக மாறிவிட்ட ஒரு அவநிலையையும் நம்மால் அவதானிக்க முடிகிறது.
 
உலகின் பார்வையில் நீர் ஒரு அருகிவரும் வளம். இந்த வளத்தை எப்படி பாதுகாப்பது, எப்படி சேமிப்பது, எவ்வாறு அடுத்த சந்ததிக்கு தேவையான நீரினை பெற்றுக்கொடுப்பது போன்ற பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்து சேர்ப்படுகின்றன. இந்தவகையில் தெற்காசியாவில் இந்தியா , மலேசியா, இலங்கை போன்ற  நாடுகள் நீரினை பாதுகாப்பதற்கு வெவ்வேறான பொறிமுறைகளை கைக்கொள்கின்றன. இந்தியாவின் சனத்தொகையின் பெருக்கமானது அந்த நாட்டின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு பலத்த சவாலாக அமைந்துள்ளதெனலாம்.
 
இலங்கை போன்ற மூன்றாம் மண்டல நாடுகளில் நீரை பலவழிகளில் பெற்றுக்கொள்கின்றனர் குழாய்வழி நீர்வழங்கல், கிணறுகளின் மூலம், குழாய்க்கிணறு, மழைநீர் சேகரிப்பு, ஆறுகள் மற்றும் குளங்கள் மூலம் இருந்தும் தூய்மையான குடிநீரினை பெற்றுக்கொள்வதில் பலத்த சவால்களை நாம் எதிர்நோக்க வேண்டிய நிர்ப்பந்தம்  எழுந்துள்ளது. எனவே இலங்கையின் சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப குடிநீரின் தேவையும் அதிகரித்தே காணப்படுகிறது.
 
அந்தவகையில் இலங்கை அரசு அதற்கான முன்னோடி வேலைத்திட்டங்களை ஆராய்ந்து வருகின்றது, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஆலோசனைக்கமைய செயலாற்றி வருகின்ற தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை,  தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் ஆகியன நேரடியாக நீர்ப்பவனையாளர்களுடன் நெருங்கிய தொடர்பினைப்பேணுகின்ற இரண்டு அரச நிறுவனங்களாகும். 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரைக்கும் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 46 வீதமானவர்கள் குழாய்வழியிலான தூய நீரினை பெற்றுக்கொள்கிறார்கள். இது 2020 ஆண்டு
 நிறைவடையும் போது அண்ணளவாக 60 விகிதத்தை அடையமுடியும் என நம்மைப்படுகின்றது.
முற்று முழுதாக முழு இலங்கைக்கும் 2030 ஆம் ஆண்டிற்குள் குழாய்வழியான தூய குடிநீரை வழங்க உத்தேசிக்கபட்டுள்ளது .
 
இலங்கையைப்பொறுத்தமட்டில் நீரை விரயமாக்குகின்ற பலவழிகளை மக்கள் கையாள்கின்றனர் தமது வாகனங்களை கழுவுவதற்கும், வீட்டு தோட்டத்திற்கு, பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு, தளபாடங்களை துப்பரவு செய்வதற்கு, கட்டிடங்கள் கட்டுவதற்கு இப்படி பலவழிகளில் தூய நீரினை உபயோகிப்பதனால் குடிநீருக்கான தட்டுப்பாடானது இலகுவில் ஏற்படுவதற்கு அது காரணமாக அமைகிறது. 
 
நீரைப்பாதுகாப்பது நமது தலையாய கடமை, இப்போது நாம் சிக்கனமாக நீரைப்பயன்படுத்தாவிட்டால் நமது எதிர்காலப்பரம்பரைக்கு தூய நீரினை பெற்றுக்கொள்வதில் பாரிய நெருக்கடிகளை எதிர் நோக்க வேண்டியிருக்கும். இந்த நெருக்கடிகளிலிருந்து மீண்டு அனைவருக்கும் பாதுகாப்பான சுத்தமான குடிநீரினை வழங்குதல் என்பது அரசாங்கத்தின் மிகமுக்கிய கடமையாகும் அதற்காக நீரினை பாதுகாப்பதோடு சிக்கனமாக பாவிப்பதற்கு பாவனையாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது அமைச்சின் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்   
 
அந்த வகையில் இலங்கையில் நீர்ப்பவனையை திட்டமிட்டு பயன்படுத்துகின்ற பழக்கத்தினை ஊக்குவிக்க வேண்டும். நீரினை விரயமாக்கும் செயற்பாடுகளை அடையாளம் கண்டு அவற்றினை தடுக்க வேண்டும். பாடசாலை மாணவர்கள் குடிப்பதற்காக நீர்க்குழாயினை திறந்து நீரை குடித்துவிட்டு குழாயை சரியாக மூடாமல் சென்று விடுவார்கள் இதன் மூலம் அந்த குழாய் வழியே நீர் வழிந்து விரயமாகிக் கொண்டே இருக்கும். இவ்வாறு விரயமாகின்ற ஒவ்வொரு துளி நீரும் பெறுமதியானதாகும்.
 
சிலநேரங்களில் பாதை ஓரங்களில் உள்ள பொதுவான நீர்க்குழாய்களிலும் இவ்வாறான நீர்விரையங்கள் ஏற்படுகின்றன. வீடுகளில் சிறுவர்கள் விளையாடுவதற்கு குழாய் நீரினை பயன்படுகின்றனர். தொழிற்சாலைகளில் பாரிய உற்பத்திகளை மேற்கொள்ள சுத்தமான நீரினையே பயன்படுத்துகிறார்கள் எனவே தூய்மையான நீர் வளத்தை பாதுகாப்பதில் இலங்கை அரசும் சம்பந்தப்பட்ட அமைச்சும் பாரிய முன்னேற்பாட்டு திட்டங்களை பற்றி ஆராய வேண்டிய தேவையுள்ளது. 
 
திட்டமிடப்பட்ட நகரங்கள், பாதுகாப்பான குடிநீர் மற்றும் மேம்படுத்தப்பட்ட துப்பரவேற்பாட்டு வசதிகளை அனைவருக்கும் வழங்குதல்,வாழும் சூழல் மற்றும் நீர் மூல வளங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதினூடாக சாதகமான நல்ல வாழ்க்கையை இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்குதல் 
எனும் கருத்திட்டத்திற்கு அமைவாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது பணிகளை மிகவும் சிறப்பாக கொண்டு நடத்துவதனை இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க வித்துரைத்துள்ளார்.
 
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஆலோசனைக்கமைய செயலாற்றி வருகின்ற தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை,  தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் ஆகியன இலங்கையின் எல்லாப்பிரதேசங்களுக்கும் தூய்மையான குழாய் நீரினை வழங்குவதில் ஆர்வமாய் செயற்படுகின்றன.  எனவே அருகிவருகின்ற அருமையான வளமான நீர் வளத்தை சிக்கனமாக பாவிப்பதோடு அடுத்தவர்களை சிக்கனமாக பாவிக்க தூண்டுகின்ற வேலையினை நாம் மேற்கொள்ள வேண்டும். அத்தோடு வீண் விரயத்தை தவிர்த்து நமது கண்முன்னால் வீண் விரயம் ஏற்படுவதையும் தடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM