Web
Analytics
நுவரெலியா மாவட்டம், மதுரட்ட நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டம் - Sri Lanka Muslim Congress

நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நுவரெலியா மாவட்டம், மதுரட்ட கிராமிய நீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாணப்பணியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (16) ஆரம்பித்து வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் நுவரெலியா மாவட்டம், மதுரட்ட கிராம சேவகர் பிரிவில் உள்ள சுமார் 534 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நோக்கத்திற்கு அமைவாக கெளரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

இதில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகள், உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM