பங்களாதேஷ்  தலைநகர் டாக்காவில் நடைபெற்ற நீர் மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக்குழுவிற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமை தாங்கினார். கடந்த ஜூலை 29ஆம், 30ஆம் திகதிகளில் அங்கு நடைபெற்ற இந்த மாநாட்டை பங்களாதேஷ்ர பிதமர் சேய்க் ஹஸீனா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

2030 ஆம் ஆண்டில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை பொறுத்தவரை நீரோடு தொடர்புடைய 1,2,3,6,11,13,14,15 ஆகிய இலக்குகளை எட்டுவதில் எதிர்நோக்கும் சவால்களுக்கு பிராந்திய நாடுகள் முகம்கொடுப்பதிலுள்ள பிரச்சினைகள் அங்கு விரிவாக ஆராயப்பட்டன.

நீர் முகாமைத்துவம், நீர் மூல வளங்களைப் பாதுகாத்தல், வீண்விரயத்தைத் தவிர்த்தல் போன்றவை பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வை பேணுவது தொடர்பிலும் இம் மாநாட்டின் போது உரிய கவனம் செலுத்தப்பட்டது.

கழிவு நீரை நன்னீராக சுத்திகரித்து பயன்படுத்தல், நீழக்கீழ் நீர் மாசாடைவதை தடுத்தல் என்பன பற்றியும் துறைசார் நிபுணர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

தெற்காசியா, கிழக்காசியா உட்பட 23 நாடுகளைச் சேர்ந்த 82 பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

மாநாட்டின் இறுதியில் தற்போது உலகில் பாரிய பிரச்சினையாக உருவாகியுள்ள குடிநீர் பற்றாக்குறை மற்றும் சுத்தமான நீர்ப் பாவனையின் தேவை என்பனவற்றை வலியுறுத்தி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், நீர் தொடர்பான டாக்கா பிரகடனமும் அங்கு வெளியிடப்பட்டது.

பங்களாதேஷ்  அமைச்சர் கஹந்தர் முஷர்ரப் ஹுசைன், இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆப்கானிஸ்தான் அமைச்சர் அலி அஹமட் ஒஸ்மானி ஆகியோரும் மாநாட்டில் சிறப்புரையாற்றினர்.

ஜெம்சாத் இக்பால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM