இறக்காமம், பாலமுனை பிரதேசத்திற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழு இன்று (12) விஜயம் மேற்கொண்டது.

இதன் போது இறக்காமம், பாலமுனை பிரதேசத்தில் எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் களமிறக்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இதன் போது கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர், தவிசாளர் முழுக்கம் அப்து மஜீத், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் முஹம்மட் நஸீர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இறக்காமம் மற்றும் பாலமுனை ஆகிய பிரதேசங்களுக்கு சென்று விட்டு கொழும்பு திரும்பும் வழியில்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் பயணஞ் செய்த ஹெலிகொப்டரை பனிமூட்டம் மற்றும் தெளிவற்ற காலநிலை காரணமாக விமானி தமது சாதுரியத்தினால் றம்புக்கனையில் தரையிறக்கினார். அங்கிருந்து அமைச்சர் தரை மார்க்கமாக  கொழும்பை வந்தடைந்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM