கண்டி பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று இரவு கண்டியிலிருந்தவாறு இன்று (06) அதிகாலை சம்பவம் நடைபெற்ற திகன, தென்னங்கும்புற, பலகொள்ள மற்றும் கங்கொள்ள ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளார்.

இவ்வசம்பாவித சம்பவத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகள் வியாபார நிலையங்கள் மிகக் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு முஸ்லிம் இளைஞர் ஒருவர் இச்சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட விடயம் பிரதி அமைச்சர் ஹரீஸ் அங்கிருந்தபோது தெரியவந்தது.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட் இந்த அசம்பாவிதத்தினால் முஸ்லிம்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM