Web
Analytics
பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவினால் நிர்மாணிக்கப்பட்ட மீராகேணி அஹமட் பரீட் மைதான விளையாட்டு அரங்கு திறப்பு - Sri Lanka Muslim Congress

பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களின் நிதியில் மீராகேணி அஹமட் பரீட் மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு அரங்கு திறப்பு விழாவும், சாதனையாளர் கௌரவிப்பு , மற்றும் ஏ.ஜீ. அப்துல் றகுமான் வெற்றிக்கிண்ணமும் அடங்கலான முப்பெரும் விழா நிகழ்வு அஹமட் பரீட் விளையாட்டு கழகத்தின் தலைவர் இஸாம் தலைமையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

இதன்போது ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் நாகமணி கதிரவேல், பிரதேச செயலாளர் வீ யூசுப், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர்கான சாஜித் மற்றும் செய்னுலாப்தீன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வின் போது பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா, பிரதியமைச்சரின் பிரத்தியோக செயலாளர் அம்ஜத் மௌலானா மற்றும் விளையாட்டு, கல்வி, அரசியல் சமூக சேவை உட்பட பல்வேறு துறைகளில் மிளிர்ந்த பலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM