முஸ்லிம்கள் எல்லைகளைக் கடந்தவர்கள். அதைத்தான் றஸூல் (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ் பேருரையில் மிகத்தெளிவாகக் கூறினார்

நிறம், செல்வம், பிரதேசம் என்ற வேறுபாடுகளை தனது காலின் கீழ் போட்டு மிதித்துப் புதைத்தும் விட்டார். மார்க்கத்தைப் பின்பற்றுவதில்தான் உயர்வு தாழ்வு உள்ளதாகவும் கூறினார்.

அந்தவகையில், ஒரு ஊரை / பிரதேசத்தை பெருமைக்குரியதாக ஆக்கிக் கொள்வது பிரதேசவாதமாகும். அதனை மையமாக வைத்து முஸ்லிம் ” உம்மா”வில் பிளவுகளை ஏற்படுத்துவது வெறுக்கத்தக்கதும் தடுக்கப்பட வேண்டியதுமாகும். இப்பிரதேசவாதம் என்ன வடிவில் வந்தாலும் அதனை எதிர்த்து நிற்பது சமூகக் கடமையாகும். இணைந்து வாழ்வதையே இஸ்லாம் போதிக்கின்றது.

பிரதேசவாதம் மிகக் கூர்மையான ஆயுதமாக சிலர் அதிக நம்பிக்கை வைக்கின்றனர். உண்மைதான். ஏற்றுக்கொள்வேம். ஆனால், இருபுறமும் கூர்மையான ஆயுதம். இந்த உண்மையை பிரதேசவாதத்தைக் கையில் எடுப்பவர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். அவர்கள் கையில் எடுத்த அதே ஆயுதம் அவர்களையே பலி கொள்வதை உணரமாட்டார்கள்.
அதற்கு அக்கரைப்பற்றைக் கடந்த காலங்களில் அரசியல் ரீதியில் வழிநடாத்தியவர்களின் தோல்வியும் ஒரு குறிப்பிட்டுக் கூறக்கூடிய உதாரணமாகும்.

அப்படித் தாம் கையில் எடுத்த ஆயுதத்தால் தாமே பலி கொள்ளப்பட்டதை உணர்ந்து, சிலர் தம்மை மீளக்கட்டியெழுப்ப முனைகின்ற போது காலம் கடந்து போயிருக்கும். ஏனைய பிரதேசங்களில் இவர்களின் ஆயுதங்களை விடக் கூர்மையான ஆயுதங்கள் பாவனையில் இருக்கும். முஸ்லிம் உம்மா குத்துயிரும் கொலையுயிருமாய்க் கிடக்கும்.

ஆகவே, குல / கோத்திரப் பெருமை எப்படி வெறுக்கத்தக்கதும் தடுக்கப்பட வேண்டியதுமோ, அப்படி பிரதேசவாதமும் ஊர்ப் பெருமையையும் வெறுக்கத்தக்கதும் தடுக்கப்பட வேண்டியதுமாகும். பிரதேசவாதத்தை அலங்கரித்து “பௌடர்” பூசி “குளோன்” அடித்து அரங்கேற்றுவதை யார் செய்தாலும், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அறிவுடமைச் சமூகம் அதனை எதிர்த்து நிற்கவேண்டும். அதற்கான முழு முயற்சியில் எல்லோரும் கை கோர்த்து நிற்போம்.

அழிக பிரதேசவாதம்
ஒழிக குலப் பெருமை
ஓங்குக முஸ்லிம் உம்மா

– எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன் –

ஏ.எல்.தவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM