பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்வதற்கு தமது வாக்குகளை வழங்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

இன்று(03) இரவு  நிறைவடைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்  உயர் பீட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள நிலவரங்களையும், முஸ்லிம்களின் எதிர்காலம் தொடர்பிலும் ஆராய்ந்த உயர் பீடம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்வது என தீர்மானித்தது.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகிய ( ஐக்கிய தேசிய முன்னணி) நாம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கத்துக்கு எதிரான ஒன்றாகவே பார்க்கின்றோம்.

இன்று கூடிய உயர் பீடத்தில் எழுந்த சில கேள்விகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களிடம் மேலும் குறிப்பிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM