(எம்.சி. அன்சார்)

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கடந்த காலங்களைப் போன்று புதிய கலப்புத் தேர்தல் முறைமையில் இளைஞர் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் பெண் வேட்பாளர்களின் விகிதாசாரம் குறைக்கப்பட்டால்  வேட்புமனு நிராகரிக்கப்படும். என மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர். சசீலன் தெவித்தார்.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் ஏற்பாட்டில் தேர்தல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் புதிய உள்ளுர் அதிகார சபைத் தேர்தல்கள் சட்டம் தொடர்பாக அறிவூட்டல் கருத்தமர்வு நேற்று முன்தினம் (25) சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் வளவாளராக கலந்து கொண்டு தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்-  ஒவ்வொரு கட்சியினதும் வேட்பாளர்களில் 25 வீதமானவர்கள் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைவது அவசியமாகவும், அவ்வாறு அமையாத கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் நிராகரிக்கப்படும். வேட்புமனுப் பத்திரத்தில் 30 வீதமான அல்லது தேவையான தொகை இளம் வேட்பாளர்களை உட்சேர்க்க முடியும், ஆனால் கட்டாயத் தேவைப்பாடு கிடையாது.

புதிய உள்ளுர் அதிகார சபைத் தேர்தல்கள் சட்டம், வேட்புமனுவில் உள்ளடக்க வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை, கட்டுப்பணம் செலுத்துல், வேட்புமனுப் பத்திரம் நிராகரிப்பதற்கான காரணங்கள், வாக்குச்சீட்டும், வாக்களித்தல், வாக்கெடுப்பு முகவர்களை நியமித்தல், வாக்கெண்ணல் நிலையங்கள், வட்டார, விகிதாசார முறையில் பெண் உறுப்பினர்களை தெரிவு செய்தல், தவிசாளர், உதவிச் தவிசாளர் நியமனம் செய்தல் போன்ற  தலைப்புகளில் விளக்கமளிக்கப்பட்டது.

இக்கருத்தமர்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரமரட்ன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஐ.அமீர், சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசீக், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவை அதிகாரிகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM