Web
Analytics
புதிய தேர்தல் முறையைப் பயன்படுத்தி கூடுதலான பிரதிநிதிகளை பெற்றுக் கொள்வோம்-அமைச்சர் ஹக்கீம் - Sri Lanka Muslim Congress

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தனித்துவத்தை நிரூபிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட அரசியல் இயக்கமாகும். எங்களுக்கு சவால்கள் ஏற்படும் போது குரல் கொடுப்பதற்கும், உரிமைகள் தொடர்பாகப் பேசுவதற்கும், அதேபோல் உதவிகள் கிடைக்கும் போது எமக்குரிய பாகம் கிடைக்கின்றதா என்பதை சீர்தூக்கிப் பார்க்கின்ற பொறுப்பும் எமக்குரியதாகும். பாகுபாடற்ற முறையில் இனவாத அடிப்படையில் பேசாது எமது உரிமைகளை நேரடியாகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் பொறுப்பு எமது கட்சிக்குரியதாகும். அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே நாம் இத் துணிச்சல் மிக்க தீர்மானத்தை எடுத்துள்ளோம். ஏனென்றால் உள்@ராட்சி தேர்தல் ஒன்றின் மூலம் தான் அதனை நிரூபித்துக் கொள்ள முடியும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று (27) சிப்பிக்குளம் பிரதேசத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

மேலும் தெரிவிக்கையில்,

ஹம்பாந்தோட்டை மா நகர சபையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றொரு பக்கத்தில் மஹிந்த ராஜபக்~வின் தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட கட்சியின் சிலரும் இருக்கலாம். அதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகளும் இருக்குமாயின் எமக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் மற்றும் அநியாயங்கள் தொடர்பாகக் குரல் கொடுப்பதற்கும் பிரதிநிதித்துவம் இருப்பதன் அவசியத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டியது எமது கடமையாகும். அதற்கான வழிமுறைகளையே நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பலமிக்க ஒரு கட்சியாகும். நாம் இங்கு எதிர்பார்ப்பது ஆட்சிப் பொறுப்பை அல்ல. எமது தேவையாக இருப்பது இந்த ஹம்பாந்தோட்டை மா நகர சபையில் எமக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதாகும். இம்முறை அதனை செய்ய முடியும் என நம்புகிறேன். அதற்காக விகிதாசார அடிப்படையில் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தேர்தல் முறை மூலம் வழி பிறந்துள்ளது. நாம் அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

இத்தேர்தல் முறையில் எம்மை ஓரளவு மிரட்டிக் கொள்வதற்கும் எமக்குக் கிடைக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையை மறைமுகமான முறையில் பறித்துக் கொள்வதற்குமான வழிமுறைகள் காணப்படலாம். எனவே நாம் இது தொடர்பாக விரிவான விளக்கத்தைப் பெற வேண்டும். அதற்காக எழுத்து மூலமாக கருத்து பரிமாறிக் கொள்ள வேண்டும். அதாவது இந்த அரசியல் ஆக்கிரமிப்பு முறையினால் ஏற்படக் கூடிய பாதிப்பு என்ன? பயன் என்ன? என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் மயில் உள்ளிட்ட பறவைகள் மற்றும் விளங்குகள் வலம் வருகின்ற ஒரு இடமாகவே காணப்பட்டது. இதனை ஒரு பொருளாதார வளமிக்க இடமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சீனாவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். இது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக நானும் பல முறை சீனா சென்று வந்துள்ளேன்.

மேலும் ஹம்பாந்தோட்டை விமான நிலையத்தில் பல்வேறு தவறுகள் இருந்தாலும் அதனை நாட்டுக்குப் பயனுள்ள இடமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். நாம் இதில் இந்தியா முதலான நாடுகளில் முதலீடு செய்வதற்காக வழிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM