புத்தளம் நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் அண்மைக்காலமாக தீவிரமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக முன்னாள் பிரதியமைச்சரும்,முன்னாள் புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ.பாயிஸ் அவர்கள் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இது சம்பந்தமாக முன்னாள் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் 06/11/2017 திங்கட்கிழமை சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிமை சுகாதார அமைச்சில் சந்தித்து புத்தளம் மக்கள் டெங்கு நோயினால் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளையும் சவால்களையும் விளக்கியுள்ளதுடன், இது சம்பந்தமாக அவசரமாக டெங்கு ஒழிப்பு சம்பந்தமான திட்டங்களை வகுத்து அதனை உடனடியாக நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய புத்தளம் பிரதேசத்தில் தீவிரமாக அதிகரித்துவரும் டெங்கு நோய் ஒழிப்புக்கான நடவடிக்கைகளை அரசாங்கத்தின் சார்பில் தனது நேரடி கண்கானிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்திருக்கின்றார். அதன் அடிப்படையில் அவரும், அவரின் உயர்மட்டக் குழுவும் புத்தளத்தை பாரமெடுத்து, புத்தளத்தில் தங்கியிருந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமோடு முன்னாள் நகர பிதா கே.ஏ.பாயிஸ் அவார்களும். அவாரது அணியினரும் களமிரங்குகின்றனர். மேலும் முன்னாள் நகர பிதா கே.ஏ.பாயிஸ் அவர்களின் நகர சபை ஆட்சி காலத்தில் இவ்வாறான டெங்கு பிரச்சினைகள் மக்கள் எதிர்நோக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைக் கருத்தில்கொண்டு  மாவட்டத்தில் பரவிவரும் டெங்கு நோயிலிருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் விஷேட டெங்கு கட்டுப்பாட்டு குழுவொன்றை அப்பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையினை சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் மேற்கொண்டுள்ளதுடன். இன்று இக்காட்டுப்பாட்டு வேலைத்திட்டம் சம்மந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்றும் புத்தளம் சுகாதார பிராந்திய பணியகத்தில் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது இக் கலந்துரையாடலுக்கு கொழும்பில் ஸ்ரீ கொத்தாவயில் நடைபெறும் அவசர கூட்டம் காரணமாக சுகாதார பிரதி அமைச்சர் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சகல விதத்திலும் இவ் வேலைத்திட்ட்திற்கு உதவ முன்வந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் இவ் நோயிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்பாடுமாறும், சூழல் பாதுகாப்பு கருதி பிரதேசங்களுக்கு சமூகமளிக்கும் பெளதீக சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறும் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் பொது மக்களிடம் கேட்டுகொண்டதும் மேலதிக அவசர தேவைகளுக்கு உடனே தொடர்புகொள்ளுமாறும் உரிய உயர் அதிகாரிகளையும் பொதுமக்களையும் வேண்டுகின்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM