எதிர்வருகின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் புத்தளம் நகர சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து களமிறங்ககியுள்ளது.

முன்னாள் பிரதியமைச்சரும், நகர பிதாவுமான கே.ஏ. பாயிஸ் அவர்களின் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அணி இன்று (07) புத்தளம் மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.

இன்றைய புத்தளம் கள நிலவரப்படி முன்னாள் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் அவர்களுக்கான ஆதரவு பல்கிப்பெருகியுள்ளமையையும் அவரின் தேவை அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.

இது சம்பந்தமாக நாம் கே.ஏ. பாயிஸ் அவர்களிடம் வினவிய போது, இன்று புத்தளம் நகர சபைக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருப்பதாகவும், தேவை ஏற்படின் வண்ணாத்தவில்லு பிரதேச சபை, புத்தளம் பிரதேச சபை, கல்பிட்டி பிரதேச சபை ஆகியவற்றிலும் தனித்து போட்டியிடுவதற்கான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

எது எப்படியிருப்பினும் இம்முறை கள நிலவரப்படி கே.ஏ. பாயிஸ் அவர்களின் தலைமையிலான அணி அதிக இடங்களில் வெற்றிபெற்று நகர சபை அதிகாரத்தை கைப்பற்றுமென நம்பப்படுகின்றது

.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM