ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசியமைப்பாளரும், சுகாதார, சுதேச வைத்திய துறை பிரதியமைச்சருமான அல்ஹாஜ் பைசல் காசீம் அவர்களினால் புத்தளம் தள வைத்திய சாலைக்கு 44 தாதிமார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் தளவைத்தி சாலையில் காணப்பட்ட பாரிய பிரச்சினைகளில் ஒன்றான தாதிமார்கள் பற்றாக்குறை என்ற பாரிய பிரச்சினையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்த்து வைத்துள்ளமையினால் மனம் மட்டில்லா மகிழ்ச்சியடைவகிறது

சுகாதார பிரதியமைச்சர் கெளரவ பைசல் காசிம் அவர்களுக்கு புத்தளம் மக்கள் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு புத்தளம் தள வைத்தியசாலைக்கு விஜயம் செய்த கெளரவ அமைச்சரிடம் முன்னால் நகரபிதா கே.ஏ.பாயிஸ் அவர்களினால் புத்தளம் தள வைத்திய சாலையில் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினகளை எடுத்துக்காட்டி குறித்த பிரச்சினைகளை அவசரமாக தீர்த்துவைக்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ரிசான் – புத்தளம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM