புத்தளம் தேர்தல் தொகுதியில் இருக்கின்ற புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபை, கல்பிட்டி பிதேச சபை,

வண்ணாத்தி வில்லு பிரதேச சபை ஆகியவற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது.

புத்தளம் கலாச்சார மண்டபத்தில் நேற்று (27.11.2017) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக முன்னாள் பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார்.

நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹகீம் அவர்கள் நேற்று (27.11.2017) திடீர் விஜயம் மேற்கொண்ட பொழுது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமாக புத்தளம் மாவட்டத்தின் ஆதரவாளர்களுடன் கருத்தறியும் நிகழ்வு இடம்பெற்றது. அதனோடு இணைந்து இடம்பெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது .

இக்கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட மேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ், உயர்பீட உறுப்பினர் பைரூஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தவர்களும் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

தற்பொழுது வேட்புமணு கோரப்பட்டுள்ளதால் பெயர்ப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வண்ணாத்தி வில்லு பிரதேச சபைக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கான பணிப்புரை விடுத்துள்ளாகவும் மேலும் தெரிவித்தார்.

-Hameed Ushama-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM