புத்தளம் மாவட்டத்தின் கிராம வைத்திய சாலைகளை சகல வசதிகளுடன் கூடிய வைத்திய சாலையாக தரமுயர்துவற்கான முதற்கட்ட நடவடிக்கையாக சுமார் 70 மில்லியன் ரூபாய் நிதியினை  சுகாதார பிரதியமைச்சர் கௌரவ அல்ஹாஜ் பைசல் காசீம் வழங்கியுள்ளார்.

இதில் நோயாளர் விடுதி, வைத்திய விடுதி போன்றவற்றிற்காக புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி வைத்திய சாலைக்கு 30 மில்யன் ரூபா ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் முந்தல் பிரதேச செயளாளர் பிரிவின் புழுதிவயல் வைத்திய சாலைக்கு 20 மில்லியன் ரூபாவும் , கரைத்தீவு வைத்திய சாலைக்கு 20 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இந்த நிதி ஒதுக்கீடு சம்பந்தமான கலந்துறையாடல் நேற்றைய தினம் (01) சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உச்சபீட உறுப்பினருமான கௌரவ S.H.நியாஸ், வடமாகாண சபை உறுப்பினர் ரயீஸ்  மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சுகாதார அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்னவின் கிராமிய வைத்திய சாலைகளை தரமுயர்த்தல் கருத்திட்டத்திற்கு அமைவாக இந்நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM