புத்தளம் மாவட்டம், கொத்தாந்தீவு, கருவமடு, கணமூலை, புலுதிவாயல் மற்றும் கடயமோட்டை உள்ளிட்ட இன்னும் சில பிரதேசங்களில் குடி நீர் வழங்குவதில் காணப்படும் பிரச்சினைகளை நேரில் சென்று ஆராய்வதற்காக, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஷபீக் ரஜாப்தீன் உள்ளிட்ட குழுவினர் புத்தளம் மாவட்டத்துக்கு அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டனர்.

விநியோகிக்கப்படும் குடிநீரின் சுத்தத்தன்மை மற்றும் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாதுள்ள நீர்த்தாங்கிகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிஸ் புத்தளம்-அக்கறைப்பற்று ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இச்சந்திப்பில் வடமேல் மாகாணசபை உறுப்பினர் எச்.எம்.எம். நியாஸ், புத்தளம் மாவட்ட நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

Image may contain: 4 people

Image may contain: 5 people, people smiling

Image may contain: 2 people

Image may contain: 8 people

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM