Web
Analytics
புல்மோட்டை சட்ட விரோத குடியேற்ற விவகாரம்  எம்.எஸ்.தௌபீக்கினால் ஜனாதிபதி செயலாளருக்கு அவசர கடிதம் உடன் நடவடிக்கை  - Sri Lanka Muslim Congress

புல்மோட்டை 13ம் கட்டை பகுதியில் சட்ட விரோதமாக பெரும்பான்மை மதகுருவினால் பதவி சிறி புர மற்றும் இலங்கையின் தென் பகுதி மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து குறித்த பிரதேசத்திற்கு சட்ட விரோதமாககாடுகளை தள்ளி வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச முஸ்லிம்களுக்கு சொந்தமான சில காணிகளில் அத்துமீறி குடியேரி வருகின்றனர்

இது விடயமாக 10.09.2018 காலை 10 மணியளவில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஜனாதிபதியின் செயலாளருக்கு தொலைபேசி மூலமாக பேசியதை அடுத்தும் அவசர தொலை நகல் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது இது விடயமாக ஜனாதிபதியின் செயலாளர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு சட்ட விரோத குடியேற்றங்களை நிறுத்தும்படி உத்தரவிட்டதிற்கு அமைவாக பிரதேச குச்சவெளி பிரதேச செயலாளர்,உதவி செயலாளர் ,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொறுப்பான கிராம சேவகர் உள்ளிட்ட சிலர் குறித்த பகுதிக்கு உடன் விஜயம் மேற்கொண்டு பிரதேச செயலாளர் சட்ட விரோத குடியேற்றங்கள் மற்றும் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு வரும் குடிசைகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு உடன் கிராம சேவையாளருக்கு அறிக்கை தயாரித்து உடன் வன பரிபாலன திணைக்களம் புல்மோட்டை பொலிஸ் நிலையம்,அரசாங்க அதிபருக்கு சட்ட விரோத குடியேற்றங்களை அகற்றும்படி அடங்கிய கடிதத்தை அனுப்பி வைப்பதாக கூறினார்

குறித்த நடவடிக்கையில் முழு மூச்சாக குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக நன்றியை தெரிவிப்பதோடு கடந்த 27.08.2018 ம் ஆகஸ்ட் அரிசிமலை அளவிட இருந்தபோது அரசாங்க அதிபரோடும் பேசி தடுத்து நிறுத்தி எமக்கு உதவி செய்தவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களையே சாரும்

மேலும் எதிர்வரும் 17 ம் திகதி மீண்டும் அரிசிமலை பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களத்திற்க்காக அளவிட இருக்கும் நடவடிக்கை குறித்தும் பேசியுள்ளதாக எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார் தொடர்ந்தும் இதுவிடயமாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM