கிழக்கு மாகாண சபையின் தனியார் போக்குவரத்து சபையினால் கடந்த மாகாண சபையின்போது கெளரவ முன்னால் கல்வி மற்றும் தனியார் போக்குவரத்து அமைச்சர் விமல வீர திஸ்ஸாநாயகே அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட புல்மோட்டை தனியார் பேருந்து தரிப்பிட நிலயத்திற்கான மல சல வசதிகூடம் இல்லாமை தொடர்பாக சில பத்திரிகைகளில் விமர்சிக்கப்பட்ட நிலையில் உடனடியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் கிழக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபை உறுப்பினரின் பணிப்பாளர் நாயகம் திரு.புஸ்பகுமார அவர்களின் கவனத்திற்கு (2016.12.26) கொண்டுவந்ததை அடுத்து மாகாண சபையின் வேண்டுகோளை அடுத்து ரூபா 800,000/- நிதி பின்வரும் தேவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
01. பெண்களுக்கான மலசல கூடம் -02
02. ஆண்கள்களுக்கான சிறுநீர் கழிக்கும் அறை -03
03. மேலதிக மலசல கூடம் – 01
குறித்த உடன் நடவடிக்கை எடுத்த கெளரவ கிழக்கு மாகாண முதல் அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவித்துக்கொள்கிறார்

தற்பொழுது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM