(எம்.சி. அன்சார்)

பெண்களின் உரிமைகளும் அந்தஸ்தும் பேணப்படும் பொழுது அந்த சமூகம் முன்னேற்றம் அடைந்து முழுமைபெறும்.என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ;.எம். மன்சூர் தெரிவித்தார்.

 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள  “ வலுவான பெண்கள் முன்னேற்றத்திற்கு வலுவகுக்கின்றார்கள்” எனும் தொனிப்பொருளில் கீழ் மகளிர் தின நிகழ்வுகள் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம். முஹம்மட் ஹனீபா தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் நேற்றுமுன்தினம்(19)  இடம்பெற்றது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே -. ஒரு சமூகத்தின் அபிவிருத்தியை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோல்அச்சமூகத்தில் வாழும் பெண்களின் சுதந்திரம், கௌரவம், சமத்துவம் என்பன சிறப்பான நிலையில் பேணப்படுவதுதான்.

அறிவு, தேர்ச்சி மற்றும் திறமைகளால் முழுமைபெற்ற பெண்கள் நாட்டின் அபிவிருத்திக்கும், அபிமானத்துக்கும் அத்தியாவசிய காரணியாவார். வீட்டிலும் மக்களிடையேயும் தொழில் நிலையங்களிலும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலும் பெண்களது பலமும் அவர்களால் நிறைவேற்றப்படும் பொறுப்புக்களும் மிகவும் முக்கியமானதாகும்.

இம்முறை உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பெண்களது அரசியலில் திருப்புமுனையாகும். பெண்கள் தம்மிடமுள்ள சிறப்பான ஆற்றல்களை பயன்படுத்தி சமூக எழுர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு இதன் மூலம் வாய்ப்புக்கிட்டும். என்றார்.

இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர். றிபா அப்துல் ஜலீல் அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், விதவைகளின்  சுயதொழிலுக்கான காசோலைகளும் உதவிகளும் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் எம்.கே. முஸ்தபா, ஜம்இயத்துல் உலமாவின் தலைவர் மௌலவி எம்.ஏ. அப்துல் காதர், நீர்ப்பானத் திணைக்களப் பொறியியலாளர் எம்.எஸ்.எம்.நவாஸ், சம்மாந்துறை பிரதேச உதவிச் செயலாளர் எம்.எம்.ஆசீக், மாதர் அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன், முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM