கொழும்பு மாவட்ட பெண்களின்  சுயதொழிலை முன்னேற்றும் வகையான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்  மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிசம்தீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஆறு (6) மாத சுய தொழில் பயிற்சிநெறி நடைபெற்றது. 

இதில் தையல், உணவு வகை செய்தல், பட்ரிக் வேலை, நுளம்பு வலை தைத்தல் போன்ற நான்கு வகையான பயிற்சி நெறிகள் நடாத்தப்பட்டன.

இப் பயிற்சி நெறியை முடித்துக் கொண்ட பெண்களுக்கான  சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் அவர்களது உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சியும் நேற்று (01) மேல்மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஷாம்தீன் தலைமையில் கொழும்பு பிரதேச செயலகத்தில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியகஸ்தர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும்  மாகாண சபை உறுப்பினரின் பிரத்தியோகச் செயலாளர் ரியாஸ் கப்பூர், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM