Web
Analytics
பொலன்னறுவை கலஹகல குடி நீர் வழங்கல் திட்டம் அமைச்சர் ரவூப் ஹக்கீமால் பொது மக்களின் பாவனைக்கு கையளிப்பு - Sri Lanka Muslim Congress

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் உருவான “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கலஹகல குடி நீர் வழங்கல் திட்டத்தை பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வும், புதூர் குடி நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (1) நடைபெற்றது.

80.2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலஹகல குடி நீர் வழங்கல் திட்டத்தினால் சுமார் 2000 குடும்பங்களும், 6.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதூர் குடி நீர் வழங்கல் திட்டத்தினால் சுமார் 180 குடும்பங்களும் நன்மையடையவுள்ளன.

அத்துடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் செயற்படுத்தப்படும் “வீட்டுக்கு வீடு மரம்” செயற்திட்டத்தையும் தலைவர் அப்பிரதேசத்தில் ஆரம்பித்து வைத்தார்.

அமைச்சர் பீ. ஹரிசன், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM