பொல்கஹவெல, பொத்­து­ஹெர மற்றும் அளவ்வ ஒருங்­கி­ணைந்த நீர் வழங்கல் திட்­டம் 28ஆம் திகதி வௌ்ளிக்­கி­ழமை பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்­ள­து.

சமூக நீர் வழ­ங்கல் திட்­டத்தின் இணைப்­பா­ளரும், முஸ்லிம் காங்­கிரஸ் செயற்­குழு செய­லா­ளரும் மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான ரிஸ்வி ஜவ­ஹர்­ஷாவின் அழைப்பின் பேரில் நடை­பெறும் இவ்­வி­ழாவில், அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பி. நாவின்ன, பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க, இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்ணான்டோ புள்ளே, அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார் மற்றும் வடமேல் மாகாண அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பல­ரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மஹாஓயா நீர்ப்பாசன மூலவளத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டும் இக்கருத்திட்டம் குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல, பொதுஹர, அளவ்வ போன்ற பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.

குருநாகல் மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலாளர் பிரிவுகளான பொல்கஹவெல, அளவ்வ, குருநாகல், மல்லவபிட்டிய, பொதுஹெர ஆகிவற்றை உள்ளடக்கிய 167 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 167,725 பயனாளர்கள் இந்த கருத்தட்டத்தின் மூலம் தூய குடிநீரை பெற்றுக்­கொள்­வார்­கள்.

இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு முதற்கட்டமாக 22000 கனமீற்றர் நீரினை சுத்திகரிக்க முடியும். இத்திட்டம் பூர்த்தியடையும்போது நாளொன்றுக்கு 29000 கனமீற்றர் நீரை சுத்திகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் எக்சிம் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் கடனுதவி திட்டத்தின் மூலம் 20,207 மில்லியன் ரூபா இக்கருத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மஹாஓயா நீர்ப்பாசன மூலவளத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுகின்ற இக்கருத்திட்டம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவிதி முறைகளுக்கு அமைவாக, உயர் தொழிநுட்பத்தில் இங்கு சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM