இலங்கை வாழ் கிராமிய மக்களின் தகத்தினை தனிக்கின்ற பாணியில் ஈடுபட்டுள்ள சமுதாயஞ்சார் அமைப்புக்களைப் பலப்படுத்தி வழிப்படுத்தும் பொறிமுறையொன்றை உருவாக்கல், மக்கள் மயப்படுத்தல் மற்றும் கண்காணித்தல் முதலானவற்றை மேற்கொள்வதற்காக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ”மக்கள் அபிமானம் பெற்ற தூய குடிநீருக்கான” (சுபென் பிரஜா அபிமானி) எனும் தொனிப்பொருளில் ஒன்றியங்களின் மாநாடு – 2017, 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் விN~ட மருத்துவ நிபுணர் சுதர்~னி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரின் அழைப்பில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் பல அரசியல் தலைவர்களும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களும், திணைக்களப் பிரதிநிதிகள் மற்றும் நாடுவூராகவுமுள்ள சமுதாயஞ்சார் அமைப்புக்களின் ஐயாயிரம் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரினதும் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புக்களின் தோற்றம், வளர்ச்சி தொடர்பாக நோக்குவது பொருத்தமாகும்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் குழாய் நீரை வழங்க முடியாத பிரதேசங்களுக்கு குழாய் நீரை வழங்கும் நோக்கில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பல நிறுவனங்களின் அனுசரணையில் 1992-1993 காலப்பகுதியில் சமூக நீர் கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நீர் வழங்கல் திட்டங்கள் சமூக அடிப்படையிலான அமைப்புக்களினால் செயல்படுத்தப்பட்டன. நாடுபூராகவும் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட 4500 கருத்திட்டங்கள் காணப்பட்டன.

2010ஆம் ஆண்டளவில் இக்கருத்திட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டன. அதன் பின்னர் 2011இல் ஆரம்பிக்கப்பட்ட தேசிய சமூக நீர் அறக்கட்டளை மூலம் வழிநடத்தப்பட்டு வந்தன. ஆனால், நீர் மூலங்கள் வற்றிப்போதல், நீர் பம்பி செயலற்றுபோதல் மற்றும் நீர் வழங்கல் திட்டங்களுக்கான மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாது மின் துண்டிக்கப்படல் முதலான காரணங்களாலும் சில சமூக அடிப்படையிலான அமைப்புகள் உரிய முறையில் செயற்படாத காரணத்தினாலும் கிராமிய மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத்தரக்கூடிய அரச நிறுவனமொன்று தோற்றுவிக்கப்படுவதன் அவசியம் உணரப்பட்டது. அதுதான் 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களமாகும்.

ஆரம்பித்தில் 12 மாவட்ட அலுவலகங்களுடன் செயற்பட்டு வந்த இத்திணைக்களம் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் பணிப்பாளர் நாயகம் ஒருவரின் நிருவாகத்தில் 25 மாவட்ட அலுவலயங்களுடன் செயற்பட்டு வருகின்றன். இத்திணைக்களத்தைச் செயற்படுத்த நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் விN~ட மருத்துவ நிபுணர் சுதர்~னி பெர்னாண்டோபுள்ளேயும் தமது அயராத பங்களிப்பை வழங்கி வருகின்றார்.

எமது சமகால சனத்தொகையில் சுமார் 46 சதவவுதமான பொதுமக்கள் குழாய் மூலம் சுத்தமான குடிநீரைப் பெற்று வருகின்றனர். அதில் 11 சதவீதமான மக்களுக்கு சமூக அடிப்படையிலான நீர் வழங்கல் திட்டங்கள் மூலம் சுத்தமான நீர் கிடைக்கப்பெறுகின்றது. தற்போது நாடுமுழுவதிலும் காணப்படுகின்ற 4029 சமூக அடிப்படையிலான அமைப்புக்கள் இனங்காணப்பட்டாலும், அவற்றுள் 3363 அமைப்புக்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் 502,957 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் பணியில் சமூக நீர் வழங்கல் திணைக்களம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது.

2015ஆம் ஆண்டு முதல் அதாவது அமைச்சர் ஹக்கீம் இத்திணைக்களத்திற்குப் பொறுப்பான அமைச்சைப் பொறுப்பேற்றதன் பின்னர் திறைசேரியிலிருந்து நிதிஒதுக்கீட்டைப் பெற்று செயற்படும் நிலையிலுள்ள கிராமிய நீர் வழங்கல் திட்டங்கள் தொடர்ந்தும் செயற்படுவதற்குத் தேவையான செப்பனிடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் நீர் குழாய் கட்டமைப்பு, நீர் தாங்கி என்பவற்றைப் புதப்பித்தல் குழாய் நீர் பம்பிகளைப் பெற்றுக் கொடுத்தல், நீர் மூலங்களை புனரமைத்தல் மற்றும் புதிதாக நீர் மூலங்களை கட்டியமைத்தல் முதலான நடவடிக்கைகள் தேவைக்கேற்ப அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முழுவதிலும் காணப்படும் சுமார் 300 நீர் வழங்கல் கருத்திட்டங்கள் பழுதுபார்கப்பட்டு மீளமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சமூக அடிப்படையிலான அமைப்புக்களை வலுவூட்டும் வகையில் நீர் வழங்கல் திட்டங்களை நிர்வகித்தல், முறையாக கணக்குகளைப் பதிவு செய்தல், பேணுதல், வருமானத்தைப் பெருக்குதல் போன்ற துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் கடந்த இரு வருட காலத்திற்குள் 77 பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சர் ஹக்கீமின் ஆலோசனையின் பேரில் இராஜாங்க அமைச்சரின் ஈடுபாட்டுடன் மின்சாரம் தேவைப்படும் 26 சமூக நீர் வழங்கல் திட்டங்களுக்கு மின் இணைப்புகள் புதிதாகப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் பங்களிப்பு தொடர்பாக அறிவூட்டுவதற்கும் சமூக அடிப்படையிலான அமைப்புக்களின் தரத்தை மதிப்பிடும் வகையிலும் 2016ஆம் ஆண்டுக்கான உலக நீர் தினத்தைக் கொண்டாடும் விழா நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் 800 சமூக அடிப்படையிலான அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் கண்டி பல்லேகலையிலும், 500 சமூக அடிப்படையிலான அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நடத்தப்பட்டதன் மூலம் இந்த அமைப்புக்களின் அவசியம் மக்கள் மத்தியில் வெகுவாக உணரப்பட்டுள்ளது.

இதனைத் தவிர அமைச்சரின் ஆலோசனையைப் பெற்று, இராஜாங்க அமைச்சர் விN~ட மருத்துவ நிபுணர் சுதர்~pனி பெர்னாண்டோபுள்ளே ளுஅயசவ ஏடைடயபந எனும் தொனிப்பொருளில் சமூக அடிப்படையிலான அமைப்பை மையமாகக் கொண்டு மாதிரிக் கிராமங்களைக் கட்டியெழுப்பும் பணியில் முழவதுமாதக ஈடுபட்டு வருகின்றார்.
இரத்தினபுரி மாவட்டத்தின் ‘துங்கம்’ என்ற கிராமத்திலும் புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளியிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்திணைக்களத்தின் பணிகள் விரிவுபடுத்தப்பட்டாலும் அரச ஒதுக்கீடு போதாத சந்தர்பங்களில் அமைச்சர் ஹக்கீமின் பணிப்புரையின் பேரில் அமைச்சின் ஒதுக்கீட்டிலிருந்தும் நிதியைப் பெற்றுக்கொடுத்து கிராமிய நீர் வழங்கல் திட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கை முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான தெரிவித்தார்.

இவ்வாறு 14 கிராமிய நீர் வழங்கல் திட்டங்களை மீளக் கட்டியமைத்தல், சிறுநீரக நோயைத் தடுக்கும் வகையிலான 20 நீர் வழங்கல் திட்டங்களை புனரமைப்பு செய்தல் மேலும் 16 மாவட்டங்களில் 360 மழை நீர் தாங்கிகளை வழங்கள் முதலான கருத்திட்டங்கள் அமைச்சின் ஒதுக்கீட்டின் மூலம் கடந்த இருவருட காலத்திற்குள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. வறிய மக்களுக்கு பொது சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியிலும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றது. இதனடிப்படையில் இரத்தினபுரி, பொலன்னறுவை, மொனராகலை மற்றும் காலி முதலான மாவட்டங்களில் கழிவறை வசதியற்ற 404 குடும்பங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அமைத்துக் கொடுத்துள்ளது.

மேலும் இலங்கை மகாவெலி அதிகார சபையின் அனுசரணையைப் பெற்று 30 நீர் சுத்திகரிக்கும் இயந்திரக்கட்டமைப்புகளை (சுழு Pடயவெ) அமைத்துள்ளது. இதற்கான தொழிநுட்ப உதவிகளை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழுள்ள சக நிறுவனமான தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவி பெறப்பட்டு வருகின்றது.

நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு முதலான மாவட்டங்களில் உலக வங்கியின் நிதி உதவியில் செயல்படுத்தப்பட்டுவரும் நீர் வழங்கல் மற்றும் பொது சுகாதார வசதிகளை மேம்படுத்தும் முக்கிய பங்குதாரராக ஆரம்பம் முதல் திணைக்களம் பணியாற்றி வருகின்றது.

மேலும், நீர் மூலவளங்கலுக்கான முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுவது சில காலங்களில் அவற்றில் நீர் வற்றிப்போவதாகும். உலக சுற்றாடல் பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையில் இரத்தினபுரி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் நீர் மூலவளங்கள் காணப்படும் பகுதிகளில் மரம் நடும் நிகழ்ச்சித்திட்டங்களையும் திணைக்களம் அமுல் நடத்தி வருகிறது இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி நீரேந்து பகுதிகளில் மரம் நடுகை மூலம் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தின் மூலம் சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் நீர் மூலவளங்கள் அண்மித்த பகுதிகளில் காடு வளர்ப்பு நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்தக் கொண்டுள்ளது. 10 மாவட்டங்களில் 160 ஏக்கர் நிலப்பரப்பில் இக்காடு வளர்ப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இவ்வருடம் (2017) தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் பணிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டு சமூக நீர் கருத்திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் குடிநீரின் தரத்தை மேம்படுத்தக் கூடிய நீர் சுத்திகரிப்பு இயந்திரக் கட்டமைப்புக்களை பெற்றுக் கொடுக்கவும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பணிகளுக்கென திணைக்களத்தில் காணப்படும் ஆளணியின் தொகை குறைவாக இருப்பினும் பூரண அர்ப்பணிப்புடனும் உத்வேகத்துடனும் இயங்கி வருகின்றமை பாராட்டுக்குரியதாகும்.

ஜெம்சாத் இக்பால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM