Web
Analytics
மக்கள் என்கின்ற சக்தி எங்களுடன் இருப்பதனால்த்தான் பல விடயங்களை சாதிக்க முடிகின்றது; ஷிப்லி பாறுக் - Sri Lanka Muslim Congress

ஒரு சமூகத்தினுடைய தேவைப்பாட்டை அறிந்துகொண்டு அந்த சமூகத்திற்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொடுப்பதுதான் அரசியல் தலைமைகள்.
ஆனால் இப்போதுள்ள அரசியல் கலாச்சாரம் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் மக்களைத் தேடுவதும், தேர்தல் காலங்கள் முடிந்த பின்பு மக்கள் தங்களது பிரதிநிதிகளை தேடுவதுமான அரசியல் கலாச்சாரம்தான் இருக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நஸீர் அஹமட் அவர்களின் பூரண ஒத்துழைப்போடு 2016ஆம் ஆண்டுக்கான மாகாண சபை நிதி ஒதுக்கீட்டிலிருந்து மீராவோடை உதுமான் பாலர் பாடசாலைக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் தலைமையில் 2017.03.11ஆந்திகதி-சனிக்கிழமை உதுமான் பாலர் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்…

மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் மக்களுடன் மக்களாக இருந்துகொண்டு அவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். அது அபிவிருத்தி சம்மந்தமாகவோ அல்லது எம்சமூகத்தினுடைய அரசியல் அதிகாரங்களைப் பற்றி பேசுகின்ற விடயங்களாகவோ அல்லது எதுவாக இருந்தாலும் எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றவர்கள் எங்களை தெரிவுசெய்த மக்கள் என்கின்ற பெரும் சக்தியாகும்.

மக்களினுடைய ஆதரவோடு, அவர்களுடைய சக்தியை பெற்றுக் கொண்டு நாங்கள் பேசுகின்ற ஒவ்வொறு தளங்களிலும் மக்களினுடைய சக்திகள் எங்களுடன் இருப்பதனால்த்தான் பல விடயங்களை சாதிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அந்த வகையில்த்தான் அதிகளவான அபிவிருத்திப் பணிகளை கல்குடாப் பிரதேசத்தில் மேற்கொண்டு வருகின்றோம். அது மாத்திரமல்லாமல் இந்த வருடமும் மாகாணச சபை மூலம் கூடுதலான ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படுள்ளது. கல்குடாப் பிரதேசம் சார்ந்த எதுவிதமான வேலைத்திட்டங்களையும் நாங்கள் முன்னெடுப்பதற்கு முதலமைச்சருடன் கொண்டு சொல்லுகின்றபோது அதற்கு எதுவிதமான மறுப்பும் தெரிவிக்காது அதனை நடைமுறைப்படுத்துகின்ற முதலமைச்சராகவே எங்களுடைய கிழக்கு முதலமைச்சர் காணப்படுகின்றார்.
கல்குடாப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தூரமுடைய வீதிகள் காபட் வீதிகளாக புனர்நிர்மானம் செய்வதற்கு எங்களுக்கு அங்கிகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. நான் நேற்றைய தினம் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு 600 கிலோமீட்டர் காபட் வீதிகள் புனர்நிர்மானம் செய்வதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவாக முஸ்லிம்கள் செறிந்துவாழும் மூன்று பிரதேசங்களில் மக்களுடைய சனத்தொகைக்கு ஏற்றவாறு வீதிகள் பிரிக்கப்பட வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் தீர்மானத்திற்கமைவாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட 9 கிலோமீட்டர் வீதிகள் காபட் வீதிகளாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவர் கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டடுதலில் நாடு பூராகவும் தூய குடி நீர்த்திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கல்குடா பிரதேசத்திலும் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு முதற்கட்டமாக அரச நிறுவனங்களுக்கும், மதஸ்த்தலங்களுக்குமான குடிநீர்த்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அத்தோடு, இன்ஷாஅல்லாஹ் எதிர்காலத்தில் கல்குடா பிரதேசத்திலுள்ள மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் மிக விரைவில் பூரணப்படுத்தப்படும் எனவும் தனதுரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களும். கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களும் ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எச்.எம். இஸ்மாயில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.ஏ. அன்வர் மற்றும் எம்.எம். அஹமட்லெப்பை, உதுமான் பாலர் பாடசாலையின் நிருவாக சபை உறுப்பினர்கள், பள்ளிவாயல்களின் நிருவாகிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Displaying HRS_9698 (Medium).JPG

Displaying HRS_9727 (Medium).JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM