(பிறவ்ஸ்)
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மானிக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் திறந்துவைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 200 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் காபட் இட்டு புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 25 கிலோமீற்றர் நீளமான வீதிகள், 5 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மானிக்கப்பட்ட காத்தான்குடி நூராணியா சுற்றுமதில், 10 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட காத்தான்குடி ஆற்றங்கரை பூங்கா மற்றும் தலா 3 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட காங்கயனோடை ஆற்றங்கரை பூங்கா, பாலமுனை சிறுவர் பூங்கா, செல்வநகர் கிழக்கு ஆரையம்பதி சிறுவர் பூங்கா என்பன அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டன.

 
அத்துடன், 2.25 மில்லியன் செலவில் மட்டக்களப்பு பாலமுனை பிரதேசத்திலுள்ள நடுவோடை கடற்கரை பகுதி அழகுபடுத்தப்பட்டுள்ளது. காத்தான்குடியில் 2.25 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்படவுள்ள பொது மலசலகூடங்களுக்கு அடிக்கல் நடப்பட்டன. மேலும், 20 மில்லியன் ரூபா செலவில் காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர் பூங்காக்கள், உடற்பயிற்சி நடைபாதை, நீண்ட வாகனத் தரிப்பிடம், இருக்கைள் என்பனவும் அன்றையதினம் அமைச்சரினால் திறந்துவைக்கப்பட்டன.
 
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினூடாக இந்த அபிவிருத்தி திட்டங்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுக், ஆரிப் சம்சுதீன்  அமைச்சரின் இணைப்பாளர் யூ.எல். முபீன் உள்ளிட்ட அமைச்சின் முக்கியஸ்தர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM